’’கெத்து’ தினேஷின் காதலி, அவர் குறித்து சில பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
’அட்டக்கத்தி’ தினேஷ், என்று அழைக்கப்பட்டு வந்த நடிகர் தினேஷ், லப்பர் பந்து படத்திற்கு பிறகு ‘கெத்து’ தினேஷ் என்று அழைக்கப்படுகிறார். இவர், தன்னுடைய காதலியுடன் இருக்கும் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
1/5
Attakathi Dinesh First Films
பா.ரஞ்சித்தின் ‘அட்டகத்தி’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி, ‘அட்டகத்தி தினேஷ்’ என்று அறியப்படுபவர், தினேஷ். இவர், கபாலி, குக்கூ உள்ளிட்ட பல முக்கியமான படங்களில் நடித்திருக்கிறார். இவர் குறித்த சில பதிவுகள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2/5
Dinesh In Lubber Pandhu
தினேஷிற்கு, அடுத்ததாக பெரிய வெற்றியை தேடிக்கொடுத்த திரைப்படம் ‘லப்பர் பந்து’. இந்த படத்தில், அவர் ‘கெத்து’ எனும் கேரக்டரில் நடித்திருப்பார். இதிலிருந்து அவருடைய பெயர் ‘கெத்து’ தினேஷ் என்றானது.
3/5
Dinesh Birthday Photos
கெத்து தினேஷ், சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவருடைய காதலியான எழிலரசி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து சில பதிவுகளை வெளியிட்டிருந்தார். அதில், தினேஷுடன் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டிருந்தார்.
4/5
Dinesh Ezhilarasi Love
எழிலரசியும் தானும் சீக்கிரமே திருமணம் செய்து கொள்வோம் என்று சில மாதங்களுக்கு முன்பாக தினேஷ் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால், அது குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் எதுவும் வெளியாகவில்லை.