Suriya : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா, தற்போது ‘சீன்’ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ரிலீஸாக இருக்கும் சமயத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.
Suriya : கோலிவுட் திரையுலகில் முக்கிய நடிகராக இருக்கிறார், சூர்யா. இவர், இந்த வருடத்தில் மட்டும் கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு ‘சீன்’ திரைப்படம் இன்னொரு பெரிய வெற்றியை தேடி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவர் உடல்நலக்குறைக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
1/5
சீன் திரைப்படம்
சீன் திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. நவம்பர் 6ஆம் தேதி இப்படம் வெளியாக இருப்பதை அடுத்து, இப்படத்தின் ப்ரமோஷன் விழாக்கள் நடைப்பெற்று வருகிறது. இதுவே, இப்படத்தின் வெற்றிக்கு பெரும் காரணமாக அமைந்தது.
2/5
காவல் அதிகாரியாக சூர்யா
சூர்யா, ‘சீன்’ திரைப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு போலீஸாக நடித்திருக்கிறார். இதனாலேயே இப்படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதைத்தாண்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சீன் படத்தின் ப்ரமோஷன் விழாக்கள் நடைப்பெற்றது. கொச்சியில் நடைப்பெற்ற விழாவில் சூர்யா கலந்து கொள்ள இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவரால் வர முடியாது என்று அறிவிக்கப்பட்டது.
3/5
சூர்யாவுக்கு உடல்நலக்குறைவு
சூர்யா, பட ப்ரமோஷனுக்காக பல்வேறு இடங்களுக்கு ட்ராவல் செய்ததால் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால்தான் அவர் கொச்சியில் நடைப்பெற்ற விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
4/5
உடல்நிலை குறித்த அப்டேட்
சூர்யாவின் உடல்நிலை குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ரசிகர்கள் இது குறித்த அப்டேட்டிற்காக காத்துக்கொண்டுள்ளனர்.
5/5
சீன் திரைப்படம் வரவேற்பை பெறுமா
சூர்யா, பல ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து 2 ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்ததுடன், மூன்றாவதாக சீன் படமும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.