பிரபல நடிகை மிருணாளினி ரவிக்கும், மகாவிஷ்ணுவுக்கும் திருமணம் முடிந்துள்ளது. இதையடுத்து, அவர்களின் திருமண புகைப்படங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் மிருணாளினி ரவி. இவருக்கும் பரம்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் மகாவிஷ்ணுவுக்கும் திருமணம் நடந்துள்ளது.
1/6
மிருணாளினி ரவி மகாவிஷ்ணு
தமிழ் திரையுலகில், வளர்ந்து வரும் நடிகைகளிள் ஒருவராக இருக்கிறார், மிருணாளினி. இவர் விஷாலுடன் எனிமி திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் பேச்சாளர் மகாவிஷ்ணுவை திருமணம் செய்துள்ளார்.
2/6
ஆன்மீக பேச்சாளருடன் காதல்
மிருணாளினி ரவி, ஆன்மீக பேச்சாளரும், பரம்பொருள் நிறுவனத்தின் நிறுவனருமான மகாவிஷ்ணுவை காதலிப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார். இத்துடன் தங்களுக்கு நிச்சயம் ஆகி விட்டதாகவும் கூறியிருந்தார்.
3/6
மகாவிஷ்ணு சர்ச்சைகள்
மகாவிஷ்ணு, சர்ச்சைக்குரிய பேச்சாளராக பார்க்கப்படுகிறார். அரசு பள்ளி மாணவர்களிடையே குருகுலக்கல்வி குறித்து பேசியது, பாவ-புண்ணிய அடிபப்டையில் அந்த ஜென்மத்தின் பலன்கள் அமைவது போன்ற இவருடைய பேச்சுகள் கடும் எதிர்ப்பை கிளப்பின.
4/6
திருமணம் முடிந்தது
பரம்பொருள் அரக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணுவும் மிருணாளினியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் தற்போது திருமணமும் செய்துள்ளனர்.
5/6
தொடர்ந்து நடிப்பாரா..?
சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் அறிமுகமான மிருணாளினி சமீப காலமாக பெரிதாக படங்களில் நடிப்பதில்லை. ஆனால் அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து நாடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.