அடுத்த வருடம் வெளியாக இருக்கும் படங்களில், முக்கிய மற்றும் அதிக எதிர்பார்ப்புக்குறிய படமாக இருக்கிறது அரசன். இந்த படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாகவே இணையம் முழுவதும் ‘அரசன் திரைப்படம் குறித்த பேச்சாகத்தான் இருக்கிறது. காரணம், அதன் சமீபத்திய பாடல்தான். ‘Fire Fire’ பாடல் கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், அனிருத் இப்படத்திலிருந்து விலகியிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்த தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
சிலம்பரசன் நடிக்கும் அரசன் படம்
தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக இருப்பவர், சிலம்பரசன். இவர், வெற்றிமாறன் இயக்கத்தில், அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்த பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
2/5
அனிருத் விலகலா..?
சமீபத்தில் கிரீஸில், காவ்யா மாறனை கரம் பிடித்த அனிருத், தன் திருமண வரவேற்பிற்கு தயாராகி வருகிறார். இப்போதைக்கு எந்த சினிமா பணியிலும் அவர் கையிலெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் அரசன் திரைப்படத்திலிருந்து விலகி விட்டதாகவும், இவருக்கு பதிலாக வேறு ஒரு இசையமைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
3/5
அனிருத்திற்கு பதில் லிடிய்ன் நாதஸ்வரம்
Fire Fire பாடலுக்கு வந்த கடும் விமர்சனங்களை அடுத்து, அனிருத்தை அரசன் படத்திலிருந்து நீக்கிவிட்டு, லிடியன் நாதஸ்வரம் எனும் புதிய இசையமைப்பாளரை வெற்றிமாறன் அரசன் படத்திற்காக தேர்ந்தெடுத்திருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், இது குறித்த் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. லிடியன் நாதஸ்வரத்தை சமீபத்தில் வெற்றிமாறன் சந்தித்த புகைப்படமும் வெளியாகி இருந்தது.
4/5
தயாரிப்பாளர் எஸ்.தாணு பதில்
அரசன் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு, சமீபத்தில் செய்தியாளர்களை வேறு ஒரு படம் விஷயமாக சந்தித்தார். அப்போது அவரிடம் அரசன் படத்திலிருந்து அனிருத் விலகினாரா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், யூகத்திற்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டார்.
5/5
சிம்பு வெற்றிமாறன் சண்டையா
அரசன் படம் குறித்து சிம்பு ஒரு கான்சர்ட் நிகழ்ச்சியில் பேசிய போது தீபாவளிக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என சொல்லியிருந்தார். இதை கேட்டு வெற்றிமாறன் கோபப்பட்டதாகவும், ஏன் டீமுடன் கலந்துறையாடாமல் இந்த விஷயத்தை கூறினார் என்றும் கேட்கப்பட்டதாம். இதனால் படம் அடுத்த வருடம் பொங்கலுக்காவது வருமா இல்லையா என்பது குறித்த சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது.