ஏசியன் கேம்ஸில் இந்திய அணி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றால், விதிமுறைகள் காரணமாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோக்ஷின் நக்வியிடமிருந்து கோப்பையை பெற வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1/5
ஆசிய விளையாட்டில் புதிய சிக்கல்
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோக்ஷிக் நக்வி, ஏசியன் கேம்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2/5
இந்திய அணிக்கு என்ன சிக்கல்?
ஆசிய கோப்பை போட்டிகளில் நக்வியிடம் இருந்து கோப்பையை பெறுவதை இந்திய அணிகள் தவிர்த்த நிலையில், ஏசியன் கேம்ஸில் இந்திய அணி வென்றால் அவரிடமிருந்தே கோப்பையை பெற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
3/5
என்ன காரணம்?
ஏசியன் கேம்ஸ் போட்டிகளில் அரசியல் ரீதியான செயல்கள் அல்லது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முடிவுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொண்டால், அம்பந்தப்பட்ட நாட்டின் ஒலிம்பிக் சங்கம் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என விதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
4/5
இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு?
விதிமுறைகளை பின்பற்றி கோப்பையை பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியாவும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முடிவை ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
5/5
வேறு வழி இருக்கிறதா?
நக்வியிடம் இருந்து கோப்பை அல்லது பதக்கத்தை பெறுவதை தவிர்க்க வேண்டும் என்றால், வேறு ஒருவரை பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு நியமிக்குமாறு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் கோர வேண்டும். ஆனால் தற்போதைய நிலையில், நக்வியிடம் இருந்தே கோப்பையை பெற வேண்டிய சூழல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.