• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /உருவாகும் லஷ்மி நாராயண யோகம்... இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்!

உருவாகும் லஷ்மி நாராயண யோகம்... இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்!

Written BySudharsan G
Published: Sep 27, 2026, 05:15 PM IST|Updated: Sep 27, 2026, 05:19 PM IST
joinshare
பித்ரு பட்ச காலகட்டத்தில் புதனும், சுக்கிரனும் இணைந்து சக்திவாய்ந்த லஷ்மி நாராயண யோகம் உருவாகும். இந்த யோகத்தால் பயனடையும் 4 ராசிகள் எவை என்பதை இங்கு காணலாம்.

2026ஆம் ஆண்டில் பித்ரு பட்சம் (மஹாளய பக்ஷம்) இன்று (செப். 27) முதல் அக்டோபர் 10ஆம் தேதிவரை அனுசரிக்கப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமி மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி மஹாளய அமாவாசை வரை இருக்கும் இந்த 16 நாட்களே பித்ரு பட்சம் ஆகும். இந்த காலகட்டத்தில் உருவாகும் லஷ்மி நாராயண யோகத்தால் யார் யாருக்கு பலன் என்பதை இங்கு காணலாம்.

Lakshmi Narayana Yog1/5

லஷ்மி நாராயண யோகம்

பித்ரு பட்சம் காலகட்டத்தில் கிரகங்களின் பெயர்ச்சியால் பல சிறப்பான யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில், புதன் கிரகமும் சுக்கிர பகவானும் இணைந்து சக்திவாய்ந்த லஷ்மி நாராயண யோகத்தை உருவாக்குகின்றனர். ஜோதிட சாஸ்திரத்தின்படி, லஷ்மி நாராயண யோகம் மங்கலகரமானதாகும். இந்த யோகத்தின் தாக்கத்தால் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையும் பணவரவும், தொழில்முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த 4 அதிர்ஷ்ட ராசிகள் குறித்து காணலாம்.
Lakshmi Narayana Yog2/5

ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள்

லஷ்மி நாராயண யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியான நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.. புதிய வருமான வழிகள் உருவாகும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதி நிலவும். சுப காரியங்கள் கைகூடும்.
Lakshmi Narayana Yog3/5

மிதுன ராசிக்காரர்களுக்கான பலன்கள்

மிதுன ராசியை ஆளும் புதனின் சேர்க்கையால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்கள் நிகழும். தொழிலில் புதிய ஒப்பந்தங்களோ அல்லது புதிய முன்னெடுப்புகளோ நல்ல லாபத்தை குவிக்கும். பேச்சுத்திறமையால் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். முதலீடுகள் மூலம் எதிர்பாராத நிதி ஆதாயம் வந்துசேரும். சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடும்.
Lakshmi Narayana Yog4/5

கன்னி ராசிக்காரர்களுக்கான பலன்கள்

கன்னி ராசியினருக்கு இந்த லஷ்மி நாராயண யோகம் தன்னம்பிக்கையையும், தொழில் சார்ந்த வளர்ச்சியையும் அளிக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய, நல்ல வேலைவாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி, விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பூர்வீக சொத்து சார்ந்த பிரச்னைகள் பேசித் தீர்க்கப்படலாம். மன அழுத்தம் குறைந்து ஆரோக்கியம் மேம்படும்.
Lakshmi Narayana Yog5/5

துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள்

சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு லஷ்மி நாராயண யோகம் அனுகூலமான பலன்களை தரும். பொருள் மற்றும் ஆடம்பர வசதிகள் பெருகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கைகூடும். தொழில் பார்ட்னர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி வியாபாரம் விரிவடையும். கணவன் - மனைவி இடையே புரிதலும் அன்பும் அதிகரிக்கும். ஆன்மீகப் பணிகளிலும் ஆர்வாம் அதிகமாகும். (பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் பொதுவான ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் அமைந்தவை.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

2

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

3

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

4

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

5

வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.