• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /கடற்கரை டூ பரங்கிமலை.. வரப்போகும் ஏசி ரயில்.. பயணிகளுக்கு சூப்பர் அப்டேட்

கடற்கரை டூ பரங்கிமலை.. வரப்போகும் ஏசி ரயில்.. பயணிகளுக்கு சூப்பர் அப்டேட்

Written ByUmabarkavi K
Published: Aug 20, 2026, 04:00 PM IST|Updated: Aug 20, 2026, 04:08 PM IST
joinshare
Chennai MRTS Train Latest Update: சென்னை கடற்கரையில் இருந்து பரங்கிமலை வரையலான வழித்தடததில் ஏசி ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் 12 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு ஏசி ரயிலை இயக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல்.

Chennai MRTS Train Latest Update:  சமீபத்தில் தான், சென்னை கடற்கரை - பரங்கிமலை இடையேயான வழித்தடம், தெற்கு ரயில்வேயிடம் மெட்ரோ நிர்வாகம் கைப்பற்றி இருந்தது. 
 

MRTS1/5

மின்சார ரயில்

சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில் சேவை. அதுவும் சென்னை கடற்கரை - பரங்கிமலை இடையேயான பறக்கும் மின்சார ரயில் சேவையை தினமும் ஆயரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அண்மையில், வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை மெட்ரோ ரயில் சேவை நீடிக்கப்பட்டது.
MRTS2/5

மின்சார ரயில்

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை தினமும் 100 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த பறக்கும் ரயில் சேவை திட்டத்தை தெற்கு ரயில்வேயிடம் இருந்து சென்னை மெட்ரோ நிர்வாகம் கைப்பற்றியுள்ளது. ரயில் வழித்தடத்தை கைமாற்றுவதற்காக அதிகாரப்பூர்வ வரைவு ஒப்பந்தம் தெற்கு ரயில்வே மற்றும் தமிழக அரசிடமே கையெழுத்தாகி உள்ளது.
MRTS3/5

மின்சார ரயில்

இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடற்கரை - பரங்கிமலை வழித்தடத்தில் ஏசி ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏசி ரயில் மட்டுமின்றி, ஏசி லிஃப்ட், எஸ்கலேட்டர், கேமரா, வாகன நிறுத்தம் போன்ற பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ரூ.6,000 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்வதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து மாநில அரசு வழியாக மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
MRTS4/5

மின்சார ரயில்

மேம்பால ரயில் வழித்தடம் அகல ரயில் பாதை என்பதால், அவ்வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்க முடியாது. இதனால், புதிய ஏசி மின்சார ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒருரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுமட்டுமின்றி, மேம்பால ரயில் நிலைய வளாங்களில் வணிக வளாகம், பொழுதுபோக்கு அம்சங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
MRTS5/5

மின்சார ரயில்

தற்போது சென்னை கடற்கரை - பரங்கிமலை வரையிலான மின்சார ரயில் கட்டணம் ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இந்த சேவையை மேம்படுத்தினால் கட்டணம் அதிகரிக்குமா என்ற அச்சம் மக்களிடையே இருந்து வருகிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களுக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
TAGS:
Chennai

Trending

  • News
  • Photos
  • Videos
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

2

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

3

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

4

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

5

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.