Chennai Corporation Property Tax: சொத்து வரி மாற்றியமைப்பு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டதாக சென்னை பெருநகர மாநகாட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
சென்னை பெருநகர மாநகராட்சியின் சொத்து வரி திருத்த மதிப்பீடு குறித்து புகார்கள் எழுந்தன. முதலில், இதுகுறித்து ஆட்சேபனை எழுப்பலாம் என மாநகராட்சி என அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக நிறுத்திவைத்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1/5
சொத்து வரி உயர்வு
சென்னையில் சொத்து வரி அதிகரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, 3-4 மடங்கு வரை சொத்து வரி அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். 5 ஆயிரம் ரூபாய் சொத்து வரி கட்டிய கட்டட உரிமையாளருக்கு ரூ. 28 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
2/5
சென்னை மாநகராட்சி
ஆனால், சொத்து வரி உயர்த்தப்படவில்லை என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்தது. அதேநேரத்தில் ஏற்கெனவே குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் சொத்து வரி செலுத்தி வருபவர்களுக்கு உரிய தரவுகளின் அடிப்படையில் திருத்திய மதிப்பீடு செய்து அறிவிப்பு வழங்கப்பட்டவர்கள் இதன்மீது ஆட்சேபனை இருந்தால் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையருக்கு மேல்முறையீடு செய்திட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3/5
ஆட்சேபனையை தாக்கல் செய்வது எப்படி?
அதேநேரத்தில் சொத்து வரி திருத்த மதிப்பீடு குறித்து ஆட்சேபனை எழுப்ப, ஆன்லைனிலேயே மேல்முறையீடு செய்யலாம். www.chennaicorporation.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் Online Services என்ற மெனுவில், Property Tax என்பதை தேர்வு செய்யவும். அதில் Objection என்பதை கிளிக் செய்யலாம். பின்னர், பதிவு செய்யப்பட்ட ஐடி மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி உள்நுழையலாம். முதல்முறை பயனாளர்கள் Not Registered ஆப்ஷன் மூலம் புதிய கணக்கை தொடங்கி உள்நுழையலாம். பில் நம்பர் அல்லது Assessment நம்பரை கையில் வைத்துக்கொள்ளவும். மற்ற ஆவணங்களையும் ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
4/5
உடனடியாக நிறுத்திவைப்பு
இந்நிலையில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டதாக கண்டறியப்பட்ட சில சொத்துகளுக்கான சொத்து வரி திருத்தத்தை பெருநகர சென்னை மாநகராட்சி உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5/5
அதுவே தொடரும்...
முந்தைய சொத்து வரியே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது திருத்தத்திற்கு முன்பு நடைமுறையில் இருந்த சொத்து வரித் தொகையே மீண்டும் அமலில் இருக்கும். திருத்திய கோரிக்கையின் அடிப்படையில் ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகை, அடுத்தடுத்த அரையாண்டுகளுக்கான முன்பண வரியாக ஈடு செய்யப்படும்.