• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ. மழையா? நவம்பரில் என்ன நடக்கும்? ஹேமசந்திரன் கணிப்பு!

சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ. மழையா? நவம்பரில் என்ன நடக்கும்? ஹேமசந்திரன் கணிப்பு!

Written ByR Balaji
Published: Oct 15, 2026, 09:02 PM IST|Updated: Oct 15, 2026, 09:04 PM IST
joinshare

நவம்பர் மாதத்தில் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரே நாளில் 40 முதல் 50 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் கணித்துள்ள நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

TN Weather 1/6

சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ. மழையா?

நவம்பர் மாதத்தில் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரே நாளில் 40 முதல் 50 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் கணித்துள்ளார். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
TN Weather2/6

வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்?

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் வழக்கமாக 44 செ.மீ. மழை பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு மழைப்பொழிவு 60 செ.மீட்டரைக் கடக்க வாய்ப்புள்ளதாக ஹேமசந்திரன் கணித்துள்ளார்.
TN Weather3/6

எந்தெந்த மாவட்டங்களில் அதிக மழை?

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் உள்மாவட்டங்களிலும் இயல்பைவிட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
TN Weather4/6

நவம்பரில் மிக கனமழைக்கு வாய்ப்பு

நவம்பர் மாதத்தில் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்யக்கூடும் என ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார். சில இடங்களில் ஒரே நாளில் 20 முதல் 24 செ.மீ. வரையிலும், குறிப்பிட்ட சூழலில் 40 முதல் 50 செ.மீ. வரையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் கணித்துள்ளார்.
TN Weather5/6

இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழகக் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் காற்றுச் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய சாதகமான சூழல் நிலவுவதாக ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார். பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் உள்மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
TN Weather 6/6

விவசாயிகளுக்கு எச்சரிக்கை

கடலோர மாவட்டங்களில் பகலில் வெயில் காணப்பட்டாலும், பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள்மாவட்டங்களிலும் மாலை நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்பதால், அறுவடை, உரமிடுதல் மற்றும் களைக்கட்டுப்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் வானிலை நிலவரத்தை கவனித்து பணிகளை திட்டமிடுமாறு ஹேமசந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
TAGS:
Weather

Trending

  • News
  • Photos
  • Videos
‘டோரதி’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

‘டோரதி’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

2

டிகிரி படித்தவர்களுக்கு அரசின் சூப்பர் வேலை.. கைநிறைய சம்பளம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

3

Exclusive: 'ஏழுமலையான் கொடுத்த சக்தி' TTD போட்டோகிராபரும்... 30 ஆண்டுகால இறைப்பணியும்!

4

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் அளிக்க சிறப்பு எண்.. தமிழக அரசு அதிரடி

5

ஐபிஎல் 2027 மினி ஏலம்... தேதி குறிச்சாச்சு... ரெடியாகும் 10 ஐபிஎல் அணிகள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.