• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /சென்னை பீச் டூ தாம்பரம்.. இன்று முதல் மின்சார ரயில்கள் ரத்து.. நோட் பண்ணுங்க

சென்னை பீச் டூ தாம்பரம்.. இன்று முதல் மின்சார ரயில்கள் ரத்து.. நோட் பண்ணுங்க

Written ByUmabarkavi K
Published: Sep 26, 2026, 09:29 AM IST|Updated: Sep 26, 2026, 09:37 AM IST
joinshare
Chennai Electric Train Service Changes: சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை சில ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Chennai Electric Train Service Changes: கிண்டி ரயில் நிலைத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதையடுத்து, தெற்கு ரயில்வே கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் சில ரயில்களை ரத்து செய்துள்ளது.
 

Chennai EMU Train1/5

சென்னை மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து

சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறைந்த கட்டணம் விரைவாக செல்வதால் மக்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். அவ்வப்போது மின்சார ரயில் சேவைகளில் தெற்கு ரயில்வே சில மாற்றங்களை கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில், தெற்கு ரயில்வே தற்போது முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Chennai EMU Train2/5

கிண்டி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, கிண்டி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பல புறநகர் ரயில் சேவைகள் அக்டோபர் 4ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai EMU Train3/5

செப்டம்பர் 26 முதல் அக்டேபார் 4ம் தேதி வரை மின்சார ரயில்கள் ரத்து

அக்டோபர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை நள்ளரிவு 12.15 மணி முதல் அதிகாலை 2.45 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், அந்த நேரத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
Chennai EMU Train4/5

எந்தெந்த மின்சார ரயில்கள் ரத்து?

செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை இரவு 11.59 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. செப்டம்பர் 26,28, 29 மற்றும் 30, மற்றும் அக்டோபர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இரவு 8.45 மணிக்கு இயக்கப்படும் தாம்பரம் - சென்னை கடற்கரை மின்சார ரயல்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
Chennai EMU Train5/5

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

செப்டம்பர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. எனவே, பயணிகள் இதற்கு ஏற்றவாறு தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TAGS:
Chennai

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெரியார் அறிவுலகத்தில் மகா பெரியவா புக்கை வைங்க... நீதிபதி சுவாமிநாதன் கருத்துக்கு சு.வெ. பதிலடி!

பெரியார் அறிவுலகத்தில் மகா பெரியவா புக்கை வைங்க... நீதிபதி சுவாமிநாதன் கருத்துக்கு சு.வெ. பதிலடி!

2

கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆபரேஷன்... இந்தியாவில் முதல்முறை - இது எப்படி சாத்தியம்? Explained

3

30,000 பெண்களுக்கு 5 ஆடுகள் இலவசம் – 'வெற்றி மகளிர்' திட்டத்திற்கான அரசாணை வெளியீடு!

4

தொடரை வென்ற இந்திய ஓடிஐ அணி... நியூசிலாந்து மண்ணில் விடைபெற்றனர் RO-KO

5

Explained : மேகதாது அணை விவகாரம்! காங்கிரஸ் டபுள் கேம் ஆடுகிறதா? தலைவர்கள் சொல்வது என்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.