Chennai Govt Jobs 2026: சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகில் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
Chennai Govt Jobs 2026: சென்னை மாவட்ட வேலைவாய்ப்புக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
1/6
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சிறப்பு சிறார் காவல் பிரிவிற்கு 1 சமூகப் பணியாளர் பணியிடமும், 2- புறத்தொடர்பு பணியாளர்கள் பணியிடங்களும் முழுவதும் ஒராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பபட விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுக்கின்றன
2/6
யாருக்கு முன்னுரிமை கிடைக்கும்?
சமூகப் பணியாளர் பணியிடத்திற்க்கு இளங்கலையில் சமூகப்பணி சமூகவியல் / சமூக அறிவியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும், மேலும் கணினி தட்டச்சு தொடர்புடைய அனுபவத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3/6
12 ஆம் வகுப்பு கல்வித்தகுதி
விண்ணப்பிக்கும் போது 42 வயதுக்கு உட்படவராக இருக்க வேண்டும். மாதம் ஊதியம் ரூ.18,536, மேலும் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்திற்க்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், தகவல் தொடர்புத் திறன் அனுபவத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4/6
ஒப்பந்த அடிப்படையிலான பணி
விண்ணப்பிக்கும் போது 42 வயதுக்கு உட்படவராக இருக்க வேண்டும். மாதம் ஊதியம் ரூ.10,592. மேற்கண்ட ஒவ்வொரு பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானவை.
5/6
இணையத்தில் டவுன்லோடு செய்யலாம்
ஒன்றுக்கு மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணியிடத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விவரங்களை https://chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
6/6
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
தகுதியான நபர்கள் உரிய விண்ணப்பப் படிவத்தில் புகைப்படம் மற்றும் சுயகையொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைப்பு செய்து, 01.10.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை -தெற்கு, எண்:1, புதுத்தெரு, GCC வணிக வளாகம், முதல் தளம், ஆலந்தூர், சென்னை -600016.( RTO office) அருகில் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ கிடைக்குமாறு சமர்ப்பிக்க வேண்டும்.