• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /சென்னைக்கு எப்போதான் மழை வரும்? வானிலை ஆய்வு மையம் சொன்ன சூப்பர் தகவல்!

சென்னைக்கு எப்போதான் மழை வரும்? வானிலை ஆய்வு மையம் சொன்ன சூப்பர் தகவல்!

Written ByYuvashree M
Published: Aug 18, 2026, 04:36 PM IST|Updated: Aug 18, 2026, 04:46 PM IST
joinshare
தமிழக கடலோர பகுதிகளில், கீழ்மட்ட வளிமண்டலத்தில், பலவீனமான காற்றோட்ட தாழ்வுப்பகுதி நிலவுவதால், எங்கெல்லாம் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மழை பெய்யும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

ஆகஸ்ட் 19ஆம் தேதியான நாளை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட ஏரியாக்களுக்கு எந்த மாதிரியான வானிலை நிலவரம் இருக்கப்போகிறது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Chennai1/5

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதே சமயத்தில் இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான பழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது.
Maximum Degree2/5

அதிகபட்சமாக வெப்பநிலை

அதிகபட்சமாக வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்சமாக, 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் வெப்பநிலை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
Other Districts3/5

பிற மாவட்டங்கள்

ஆகஸ்ட் 18ஆம் தேதியான இன்று, செங்கல்பட்டு, விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கூடவே, திருவள்ளூர், சென்னை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுரை, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Cloudy4/5

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நாளை 27-28 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Lite Rain5/5

மிதமான மழை

வரும் நாட்களில், வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

2

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

3

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

4

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

5

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.