Chennai PowerCut September 11: சென்னையில் நாளை (செப்டம்பர் 11) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
Chennai PowerCut September 11: செப்டம்பர் 11ஆம் தேதியான நாளை கிண்டி, நந்தம்பாக்கம், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், செம்பரம்பாக்கம், தாம்பரம், வேளச்சேரி, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
1/5
சென்னையில் மின்தடை
சென்னையில் நாளை (செப்டம்பர் 11) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி ஐந்து மணி நேரத்திற்கு பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்கு பிறகு வழக்கம்போல் மின் விநியோகம் இருக்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. எனவே, இதற்கு ஏற்ப மக்கள் தங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
2/5
கிண்டியில் மின்தடை
கிண்டி பகுதியில் முனுசாமி தெரு, தனகோட்டி ராஜா தெரு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, தெற்கு பகுதி, படவேட்டம்மன் கோயில் தெரு, லாசர் தெரு, ராஜ்பவன் கன்னிகாபுரம், குல்மோகர் அவென்யூ, சாத்தானி பேட்டை தெருக்கள், மந்தோப்பு தெரு, சக்கரபாணி சாலை, லிங்க் சாலை, நரசிங்கபுரத்தின் ஒரு பகுதி, பிள்ளையார் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
3/5
நந்தம்பாக்கம், ஆதம்பாக்கத்தில் மின்தடை
நந்தம்பாக்கம் பகுதியில் மகாலட்சுமி நகர், எம்ஜிரோடு, கொளப்பாக்கம், பஜனை கோயி தெரு, ஊர்வில்லா, ராமச்சந்திரா நகர், பொழிச்சலூர் பல்லாவரம் பிரதான சாலை, மாதா டவுன் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. ஆதம்பாக்கம் பகுதியில் மோகனபுரி 1 முதல் 5வது தெரு, ஈபி காலனி தெருக்கள், ஈபி காலணி பிரதான சாலை, ஜோசப் காலனி, வேல் நகர் பகுதிகளிலும் மின்தடை செய்யப்படுகிறது.
4/5
நங்கநல்லூர், மடிப்பாக்கத்தில் மின்தடை
நங்கநல்லூர் பகுதியில் செங்கழனி அம்மன் கோயில், பகத் சிங், முத்து முகமது தெரு, புழுதிவாக்கம் மாநகராட்சி அலுவலகம், ராஜேஸ்வரி நகர், செங்கல்வராயன் தெரு, தங்கவேல் தெரு, புழுதிவாக்கம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. மடிப்பாக்கத்தில் குளக்கரை தெரு, கன்னியம்மன் கோயில் தெரு, சதாவிசம் நகர், ராகவேந்திரா சாலை தெருக்கள், தாங்கள் சாலை பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
5/5
தாம்பரம், செம்பரம்பாக்கத்தில் மின்தடை
செம்பரம்பாக்கம் பகுதியில் பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, யமுனா நகர், கோலப்பன்சேரி, சொக்கநல்லூர், பிடாரிதாங்கல், நசரத்பேட்டை, மேம்பூர், திருமழிசை, அகரமேல் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. தாம்பரம் பகுதியில் சுந்தரம் காலனி, பாரதமாதா தெரு, வால்மீகி தெரு, ஆததி நகர், ஐஏஎப் சாலை, ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.