Chennai Ac Electric Buses: மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 290 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் 250 புதிய பேருந்துகளின் சேவையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்.
Chennai Ac Electric Buses: எனவே, எந்தெந்த வழித்தடத்தில் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
1/5
மாநகர பேருந்துகள்
சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 697 கோடி ரூபாய் செலவில் 625 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் ஐந்து பணிமனைகள் மூலம் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
2/5
750 புதிய பேருந்துகள்
இதனைத்தொடர்ந்து, 1,337 கோடி ரூபாய் மதிப்பிலான 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் 7 பணிமனைகள் மூலம் இயக்கிடத் திட்டமிடப்பட்டு, அதன் முதற்கட்டமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 234 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் 130 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளின் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
3/5
ரூ.756 கோடி மதிப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 756 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,614 புதிய பேருந்துகள் இயக்கிடத் திட்டமிடப்பட்டு, 6 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் முதற்கட்டமாக 55 கோடியே 58 இலட்சம் ரூபாய் செலவில் 120 புதிய பேருந்துகளின் சேவை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
4/5
மத்திய பணிமனை
மத்திய பணிமனையில் இருந்து இயக்கப்படும் 50 தாழ்த்தள பேருந்துகள் இயக்கப்படுகிறது. இங்கிருந்து கண்ணாதாசன் நகர், தீவுத்திடல் - கிளாம்பாக்கம், பெரம்பூர் - அண்ணா சதுக்கம், அண்ணா சதுக்கம் பட்டாபிராம், பாரிமுனை - குன்றத்தூர், தி.நகர் - திருவேற்காடு, அண்ணா சதுக்கம் - பூவிருந்தவல்லி ஆகிய வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கப்படுகிறது.
5/5
ஆலந்தூர் பணிமனை
ஆலந்தூர் பணிமனையில் இருந்து இயக்கப்படும் 80 தாழ்த்தள குளிர்சாதன மின்சார பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, விமான நிலையம் - கிளாம்பாக்கம், விமான நிலையம் - சிறுசேரி, செங்குன்றம் - கிண்டி, கோயம்பேடு - சிறுசேரி, அம்பத்தூர் - வேளச்சேரி, பல்லாவரம் - செங்கல்பட்டு, ஆலந்தூர் - சிறுசேரி, கோயம்பேடு - கிளாம்பாக்கம், தாம்பரம் - சிறுசேரி உள்ளிட்ட வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கப்படுகிறது.