Chennai Super Kings Latest News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக, இரண்டு வீரர்களை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
1/5
CSK- கேப்டன்சியில் பிரச்சனை
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. கடந்த சீசனில் ருதுராஜின் ஸ்ட்ரைக் ரேட்டும் 123 ஆக மட்டுமே இருந்தது. இதனால் 2027 சீசனில் கேப்டன் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என சஞ்சு சாம்சன் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
2/5
சஞ்சு சாம்சனுக்கு பதிலாக 2 வீரர்கள்?
ஆனால் கேப்டன் பதவியை சஞ்சு சாம்சனுக்கு கொடுக்க சிஎஸ்கே நிர்வாகம் தயாராக இல்லை என கூறப்படுகிறது. சாம்சன் அணியை விட்டு வெளியேற விரும்பினால், அவரை விடுவிக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு மாற்றாக, ஹேரி ப்ரூக்கை ஏலத்தில் வாங்கி ஓபனராகவும், கார்த்திக் சர்மாவை விக்கெட் கீப்பராகவும் களமிறக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
3/5
19 வயது வீரருக்கு கேப்டன் பதவி?
ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அடுத்ததாக இளம் வீரர் ஒருவரையே கேப்டனாக நியமிக்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, 19 வயது வீரரான ஆயுஷ் மாத்ரேவை அடுத்த கேப்டனாக நியமிக்க சிஎஸ்கே விரும்புவதாக கூறப்படுகிறது. அவரை கேப்டனாக்கினால் அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளுக்கு கேப்டன்சி பிரச்சனை இருக்காது என நிர்வாகம் கருதுகிறதாம்.
4/5
ருதுராஜ் கெய்க்வாட் வெளியேறுகிறாரா?
2027 சீசனின் தொடக்க போட்டிகளில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே தொடர்ந்து சொதப்பினால் உடனடியாக ஆயுஷ் மாத்ரேவிடம் கேப்டன் பொறுப்பை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் 2027 சீசனுக்கான டிரேடிங்கிலேயே சிஎஸ்கேவில் இருந்து வெளியேற ருதுராஜ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
5/5
ரூ. 25 கோடிக்கு KKR செல்லும் ருதுராஜ்?
ருதுராஜ் கெய்க்வாட்டை டிரேடிங் மூலம் வாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல். கேமரூன் கிரீனை விடுவித்து, அந்த ரூ. 25 கோடி தொகையை ருதுராஜுக்கு செலவிடலாம் என கேகேஆர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரை வாங்கி ஓபனராகவும், கேப்டனாகவும் நியமிக்கலாம் என கேகேஆர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.