15 வயதில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்த வைபவ் சூரியவன்ஷிக்கு, மைதானத்திற்கு வெளியேதான் உண்மையான சவால் காத்திருக்கிறது என டேவிட் மலான் தெரிவித்துள்ளார்.
1/5
15 வயதில் இரட்டை சதம்.. கிரிக்கெட் உலகை வியக்க வைத்த சூர்யவன்சி
இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திரமாக உயர்ந்து வருகிறார் வைபவ் சூர்யவன்சி. ஆசிய கோப்பை ரசிங் ஸ்டார்ஸ் 2026 தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான அதிரடியாக விளையாடிய அவர், 52 பந்துகளில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். 28 சிக்ஸர்களை பறக்கவிட்ட அவரது ஆட்டம் கிரிக்கெட் உலகையே வியக்க வைத்துள்ளது.
2/5
மைதானத்திற்கு வெளியேதான் உண்மையான சவால்
சூரியவன்சியின் ஆட்டத்தை பாராட்டிய இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் மலான். அவருக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் குறித்து எச்சரித்துள்ளார். 15 வயதிலேயே அதிக புகழையும் எதிர்பார்ப்புகளையும் பெற்றுள்ளதால், மைதானத்திற்கு வெளியே கிடைக்கும் கவனத்தை அவர் எப்படிக் கையாள்கிறார் என்பதுதான் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
3/5
வைபவ் சூர்யவன்சிக்கு காத்திருக்கும் சிக்கல்கள்
சிறு வயதிலேயே பிரபலமாகும்போது பலரும் வீரரைச் சுற்றி வருவார்கள். அவரது நேரத்தையும் பணத்தையும் எதிர்பார்க்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும். இதுபோன்ற சூழல்களில் யாரை நம்புவது, எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதை சூரியவன்ஷி புரிந்துகொள்ள வேண்டும் என்று டேவிட் மலான் கூறியுள்ளார். புகழைச் சரியாகக் கையாள்வதற்கான வழிகாட்டுதல் அவருக்கு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
4/5
இயல்பான ஆட்டத்தை மாற்ற வேண்டாம்.. டேவிட் மலான் அட்வைஸ்!
சூரியவன்ஷியின் பேட்டிங் திறமையில் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பது மலானின் கருத்து. அவர் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், தவறுகள் மூலம் கற்றுக்கொண்டு வளர்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், மைதானத்திற்கு வெளியே அவரைச் சரியாக வழிநடத்தும் நம்பகமான நபர்கள் உடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
5/5
ஷார்ட் பந்துகள் பலவீனமா?
சூரியவன்ஷியின் பேட்டிங்கில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷார்ட் பந்துகளை வீசி சோதிக்க வாய்ப்புள்ளதாக மலான் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், இந்த சவாலை எதிர்கொள்ளும்போது தனது இயல்பான ஆட்டத்தை அவர் இழந்துவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். லெக் சைடு மட்டுமின்றி ஆஃப் சைடிலும் சிக்ஸர்களை விளாசும் திறன் கொண்ட சூரியவன்ஷி, சரியான வழிகாட்டுதலுடன் தொடர்ந்து வளர்வார் என்பது மலானின் நம்பிக்கையாக உள்ளது.