டெல்லி கேப்பிடல்ஸ் அணிதான் இந்த முறை இரண்டு வீரர்களை டிரேட் மூலம் கொடுத்து, 2 வீரர்களை பெற்றிருக்கிறது. தற்போது மினி ஏலத்தில் 2 வெளிநாட்டு வீரர்களை டார்கெட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத அணிகளுள் ஒன்று. 2008ஆம் ஆண்டில் இருந்து ஏமாற்றம் அளித்து வரும் டெல்லி இந்த முறை புதிய அவதாரத்தை எடுத்திருக்கிறது. சௌரவ் கங்குலி தலைமை பயிற்சியாளராக வந்துள்ளார், புதிய பயிற்சியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
1/5
2027 மினி ஏலம்
ஐபிஎல் 2027 மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி கோவாவில் நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு, வரும் நவம்பர் 17ஆம் தேதி அன்றுதான் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை இறுதி செய்ய வேண்டும். எனவே, ஒவ்வொரு அணிகளும் ஐபிஎல் மினி ஏலத்திற்கு தயாராகி வருகிறது. எந்தெந்த வீரரை மினி ஏலத்தை முன்னிட்டு விடுவிக்கலாம், தக்கவைக்கலாம்; மினி ஏலத்தில் யார் யாரை குறிவைக்கலாம் என்ற தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
2/5
2 வெளிநாட்டு வீரர்களுக்கு டார்கெட்
அந்த வகையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி வரும் மினி ஏலத்தில் இரண்டு வெளிநாட்டு பேட்டர்களை டார்கெட் செய்ய இருப்பதாக மேற்கு வங்கத்தை தலைமையிடமாக இயங்கும் Anandabazar Patrika என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆஸ்திரேலிய இளம் பேட்டர் ஜேக் ஃபிரேசர் மெக்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஷாய் ஹோப் ஆகியோரை ஏலத்தில் எடுக்க தலைமை பயிற்சியாளர் சௌரவ் கங்குலி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
3/5
யார் இந்த பிரேசர் மெக்கர்க்?
ஏற்கெனவே இந்த இரண்டு வீரர்களும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி உள்ளனர். 2024ஆம் ஆண்டில் லுங்கி இங்கிடி காயமடைந்ததை தொடர்ந்து ரூ.50 லட்சத்திற்கு ஃபிரேசர் மெக்கர்க்கை டெல்லி அணி எடுத்தது. அடுத்து அவரை மெகா ஏலத்தில் RTM பயன்படுத்தி 9 கோடிக்கு எடுத்தது. டெல்லி அணிக்காக 2 சீசன்களில் மொத்தமாக 15 போட்டிகளில் விளையாடி 385 ரன்களை சேர்த்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 199.48 ஆகும்.
4/5
நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஷாய் ஹோப்
மறுபுறம் ஷாய் ஹோப் 2024ஆம் ஆண்டில் டெல்லி அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 183 ரன்களை எடுத்தார், ஸ்ட்ரைக் ரேட் 150. அப்போதைய மினி ஏலத்தில் டெல்லி அணி ரூ.40 லட்சத்திற்கு அவரை எடுத்தது. பின்னர் மெகா ஏலத்தில் விடுவித்தது. தற்போது இருவருமே எந்த அணியிலும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை, ஏலத்தில் நிச்சயம் பதிவு செய்வார்கள்.
5/5
டெல்லி கேப்பிடல்ஸ் வியூகம்
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஹேமந்த் பதானி விலகியதை தொடர்ந்து சௌரவ் கங்குலி அப்பதிவுக்கு நியமிக்கப்பட்டார். தொடர்ந்து யுவராஜ் சிங் பேட்டிங் மற்றும் உதவிப் பயிற்சியாளர், சமிந்தா வாஸ் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர், அமித் மிஸ்ரா சுழற்பந்துவீச்சு பயிற்சியாளரா தேர்வாகினர். குல்தீப் யாதவை கொடுத்து லக்னோவிடம் இருந்து ரிஷப் பண்டை டெல்லி டிரேட் செய்தது. நடராஜனை எஸ்ஆர்ஹெச் அணிக்கு கொடுத்து ஷீஷன் அன்சாரியை டெல்லி அணி எடுத்தது. ஐபிஎல் மினி ஏலத்திற்கு பெரிதாய் தயாராகி வருகிறது.