நடிகை அசினின் மகளான அரின், 9 வயதில் 12 மொழி பேசுபவராக இருக்கிறாராம். இவர் குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர், அசின். சினிமாவை விட்டு விலகி விட்ட இவர், தற்போது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார். இவருக்கு அரின் என்கிற மகளும் உள்ளார். இவர் குறித்த சில தகவல்கள்தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
1/5
அசின் பூர்விகம்
தமிழ் திரையுலகில், யாராலும் தவிர்க்க முடியாத இடத்தில் இருந்தவர், அசின். கேரளாவை சேர்ந்த இவர், தமிழில் உள்ளம் கேட்குமே படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, கஜினி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
2/5
அசின் நடித்த ஹிட் தமிழ் படங்கள்
அசின், தமிழில் அதிக படங்களில் நடித்ததில்லை. இருப்பினும், அவருடைய படங்கள் பெரும்பாலும் தமிழில் ஹிட்தான். இவர் அதிகம் ஜோடி சேர்ந்து நடித்தது, விஜய்யுடன்தான். சிவகாசி, போக்கிரி, காவலன் போன்ற படங்களில் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.
3/5
அசின் ராகுல் திருமணம்
நடிகை அசினுக்கும் தொழிலதிபரான ராகுல் ஷர்மாவிற்கும் 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் இவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நடிகை சின் நடிப்பதில் இருந்து விலகிவிட்டு, மொத்தமாக மும்பைக்கே குடிய்பெயர்ந்து விட்டார்.
4/5
அசினின் மகள் அரின்
நடிகை அசினுக்கு, கடந்த 2017ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் பெயர், அரின். இவர், சமீபத்தில் தன்னுடைய 9வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது தன் குழந்தையின் புகைப்படங்களை அசின் பகிர்ந்திருந்தார். அசினின் மகள் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. அசினின் கணவர் ராகுல், சமீபத்தில் தன்னுடைய குழந்தை பற்றி பேசியிருக்கிறார். அப்போதும், தன் மகள் 2ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், தன் மகளுக்கு மொழிகள் மீது அதிக ஆர்வம் இருப்பதாகவும் கூறினார்.
5/5
12 மொழிகள் தெரியுமாம்
ராகுல், தன் மகளுக்கு கொரியன், ஜப்பானிய, தாய், சைனீஸ் உள்ளிட்ட 12 மொழிகள் பேச தெரியும் என்று கூறியிருக்கிறார். இதை கேட்ட நெட்டிசன்கள், பாப்பாவுக்கு எப்படி 9 வயதிலேயே இத்தனை மொழி தெரியும் என கேட்டு வருகின்றனர்.