• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /Flipkart நிறுவனத்தில் வேலை கிடைக்குனுமா? அரசின் வேலைவாய்ப்பு முகாம்.. எங்கு, எப்போது?

Flipkart நிறுவனத்தில் வேலை கிடைக்குனுமா? அரசின் வேலைவாய்ப்பு முகாம்.. எங்கு, எப்போது?

Written ByUmabarkavi K
Published: Sep 23, 2026, 11:48 AM IST|Updated: Sep 23, 2026, 12:03 PM IST
joinshare
Chennai Job Fair: சென்னையில் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் flipkart நிறுவனத்திற்கு என பிரத்யேகமாக நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பற்றோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.

Chennai Job Fair: இந்த வேலைவாய்ப்பு முகாமில் எப்படி கலந்து கொள்ளலாம் என்பது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 

Chennai Job Fair1/5

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு

தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார்துறையில் வேலைவாய்ப்புகள் பெற்றுவழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்றுவருகின்றனர்.
Chennai Job Fair2/5

செப்டம்பர் 25ஆம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையங்களும் இணைந்து 25.09.2026 (வெள்ளிக்கிழமை) அன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.
Chennai Job Fair3/5

வேலைவாய்ப்பு முகாம் எங்கு, எப்போது நடக்கிறது?

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை-32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாம் Flipkart நிறுவனத்திற்கென பிரத்தியேகமாக நடத்தப்படுகிறது.
Chennai Job Fair4/5

Flipkart நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை

இம்முகாமில் Flipkart நிறுவனம் Delivery Executive /Delivery Associateபோன்ற Smart Phone, Two Wheeler, Driving Licence, Aadhar Card, Bank Account போன்றவற்றை கொண்ட வேலைநாடுநர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை
Chennai Job Fair5/5

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வது எப்படி?

இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள்தங்கள் விவரங்களை தமிழ்நாடு அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in ) பதிவேற்றம் செய்யவேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
TAGS:
Velai Vaippu

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.