Guru Peyarchi Palangal: குரு பெயர்ச்சி செப்டம்பர் 3ஆம் தேதியான இன்று நடக்கிறது. குரு பகவான் ஆயில்யம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். இதனால், மூன்று ராசிகளுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
Guru Peyarchi Palangal: மகரம், சிம்மம், துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும்
1/5
குரு பெயர்ச்சி பலன்கள்
அந்த வகையில், பஞ்சாங்கத்தின்படி, செப்டம்பர் 3ஆம் தேதி இரவு 7.02 மணிக்கு குரு பகவான் ஆயில்யம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். ஆயில்யம் நட்சத்திரத்தின் இரண்டாம் நிலையில் செப்டம்பர் 20ஆம் தேதி காலை 8.53 மணி வரை குரு பகவான் நிலைத்திருப்பார். குருவின் இந்த பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும்.
2/5
குரு பெயர்ச்சி
ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக குரு பகவான் இருக்கிறார். குரு பகவான் 12 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குரு பகவான் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இன்று குரு பகவான் பெயர்ச்சி நடக்கிறது.
3/5
சிம்மம்
சிம்மம் - குரு பெயர்ச்சியால் சிம்மம் ராசிக்காரர்கள் நேர்மறையான ஆற்றல் உண்டாகும். பணியில் முன்னேற்றம் இருக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பிற மொழி சார்ந்த மக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். சிறுதூரப் பயணம் முலம் புதிய அனுபவம் கிடைக்கும். ஆன்மீகம் தொடர்பான செயல்பாடுகளில் தெளிவுகள் அதிகரிக்கும். உயரதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும்.
4/5
துலாம்
துலாம் - குரு பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை மேம்படும். உங்களுக்கு சாதகமாக அனைத்து விஷயங்களும் நடக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த பலன்களை பெறுவீர்கள். எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும் முதலீடுகளும் அதிகரிக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். வியாபார பணிகளில் லாபங்கள் கிடைக்கும். இழுபறியான தன வரவுகள் கிடைக்கும். அரசு பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்
5/5
மகரம்
மகரம் - குரு பகவான் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் 7ஆம் வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். இதனால, மகர ராசிக்காரர்களுக்கு செல்வம் அதிர்ஷ்டம் பெருகும். உங்களுககு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். தெழில், வேலையில் முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். தடைகள் நீங்கும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்க வஅதிக வாய்ப்புள்ளது.