• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /அக்டோபரில் குரு பெயர்ச்சி: அட்டகாசமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் இவைதான்

அக்டோபரில் குரு பெயர்ச்சி: அட்டகாசமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் இவைதான்

Written BySripriya Sambathkumar
Published: Sep 30, 2026, 02:09 PM IST|Updated: Sep 30, 2026, 02:14 PM IST
joinshare
Guru Peyarchi Palangal: அக்டோபர் மாத இறுதியில் குரு பகவான் சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் 4 ராசிகள் மிகப்பெரிய அதிர்ஷ்ட்டத்தை அடையவுள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

Jupiter Transit: ஜோதிட சாஸ்திரத்தில், குரு பகவான் ஞானம், அதிர்ஷ்டம், செல்வம், திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் ஆகியவற்றின் முக்கிய காரணியாகக் கருதப்படுகிறார். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, 2026-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி மதியம் 12:01 மணிக்கு, குரு பகவான் வழக்கத்தை விட வேகமான கதியில் (அதிசார கதியில்) சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். குரு பகவான் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி வரை சிம்ம ராசியிலேயே சஞ்சரிப்பார். சிம்ம ராசியானது அதிகாரம், தலைமைத்துவம், கௌரவம் மற்றும் தன்னம்பிக்கை போன்ற சூரியனின் பண்புகளுடன் தொடர்புடையது.

Aries1/7

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு, குரு பெயர்ச்சி பெரிய அலவிலான நற்பலன்களை அளிக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்கள் பெரும் வெற்றியை அடைய வாய்ப்புள்ளது. புதிதாகத் திருமணமான தம்பதியினருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பங்குச் சந்தை மற்றும் முந்தைய முதலீடுகள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கக்கூடும். வாழ்வில் வெற்றிகள் குவியும்.
Leo2/7

சிம்மம்

குரு பகவான் சிம்ம ராசியில்தான் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கும். உங்கள் தன்னம்பிக்கை மற்றும் முடிவெடுக்கும் திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நீங்கள் காணவிருக்கிறீர்கள். சமூகத்திலும் பணியிடத்திலும் உங்கள் நற்பெயரும் அந்தஸ்தும் உயரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வேகம் பெறும். உங்கள் உடல்நலத்திலும் முன்னேற்றம் ஏற்படலாம்.
Libra3/7

துலாம்

சிம்ம ராசியில் குரு பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு அனுகூலமானதாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் முதன்மை வருமானம் மற்றும் அன்றாட வருமானம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படும். புதிய வணிக ஒப்பந்தங்கள் மற்றும் கூடுதல் வருமான வழிகள் உருவாக வாய்ப்புள்ளது. மூத்த உடன்பிறப்புகள் மற்றும் உயர் அதிகாரிகளிடமிருந்து உங்களுக்கு முழுமையான ஆதரவு கிடைக்கும்.
Sagittarius4/7

தனுசு

குரு பெயர்ச்சி தனுசு ராசிக்கு சாதகமான நன்மைகளை அளிக்கவுள்ளது. இந்தச் சஞ்சாரம் உங்கள் உறங்கிக்கொண்டிருக்கும் அதிர்ஷ்டத்தை தட்டி எழுப்பும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். மேலும் புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அலுவலக பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் விரும்பிய இடமாற்றம் கிடைக்கலாம். ஆன்மீகச் செயல்பாடுகள் மற்றும் புனிதப் பயணங்கள் மீதான ஆர்வமும் அதிகரிக்கும்.
Jupiter Transit5/7

குரு பகவானின் சுப பலன்களை அதிகரிக்கச் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

வியாழக்கிழமைகளில் கோவிலில் உள்ள தர்ஷிணாமூர்த்தி சன்னிதியில் கொண்டைக்கடலை மாலை சமர்ப்பிக்கலாம். ஏழை எளியவர்களுக்கு தான தர்மம் செய்வது நன்மை பயக்கும்.
Guru Peyarchi Palangal6/7

குரு பகவானின் அருள் பெற

குரு பகவானின் அருள் பெற, 'ஓம் விருஷபத்வஜாய வித்மஹே, க்ருணி ஹஸ்தாய தீமஹி, தந்நோ குருஹ் ப்ரசோதயாத்' என்ற குரு காயத்ரி மந்திரம் மற்றும் "ஓம் ப்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ" என்ற மந்திரத்தை தினமும் பாராயனம் செய்யலாம்.
Disclaimer7/7

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.