மதுரை மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசு விற்பனையை கடைகளை அமைக்க விண்ணப்பங்களை வரவேற்பதாக மதுரை காவல்துறை அறிவித்துள்ளது. காவல்துறை தெரிவித்துள்ள விதிமுறைகளை சற்று விரிவாக இங்கு காணலாம்.
பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க பல விதிமுறைகள் உள்ளன. மேலும் உரிய அனுமதியுடன் மட்டுமே பட்டாசு கடைகளை அமைக்க வேண்டும். எனவே இது முக்கியமான அறிவிப்பாகும்.
1/5
பட்டாசு கடை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு விற்பனைக் கடைகள் அமைக்க விரும்புவோர் போலீசாரிடம் அனுமதி கோருவது வழக்கம். அந்த வகையில், மதுரை நகரில் தற்காலிக பட்டாசு விற்பனை கடைகளை அமைக்க விண்ணப்பிக்கலாம் என மதுரை காவல்துறை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2/5
பட்டாசு கடை
இதுகுறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் தரப்பில் வெளியான செய்தி குறிப்பில், "மதுரை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோர் உரிமம் பெற வேண்டியது அவசியம். முழுமையாக நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் 10 ரூபாய்க்கான நீதிமன்ற அஞ்சல் வில்லை ஒட்டியிருக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 9ஆம் நம்பர் விண்ணப்பத்துடன் மார்பளவு புகைப்படம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3/5
பட்டாசு கடை விதிமுறைகள்
விண்ணப்பத்துடன் தீயணைப்புத்துறையால் தடையில்லாச் சான்றிதழ்; கடையில் இரண்டு வழிகள் உள்பட விற்பனைக் கடையின் வரைபடம், கடையின் முகவரி முழுமையாக குறிப்பிட்டு, மனுதாரரின் கையொப்பம் இருக்க வேண்டும். பட்டாசு கடை அமைய உள்ள இடத்தை சுற்றி 50 மீட்டர் அளவில் இருக்கும் அமைவிடங்களின் வரைபடத்தை சமர்பிக்க வேண்டும். அந்த இடம் சொந்த கட்டடமாக இருந்தால் 2026-27 ஆண்டுக்கான செலுத்தப்பட்ட சொத்து வரி ரசீது (செப்டம்பர் 30 வரை), வாடகை கட்டடம் என்றால் கட்டட உரிமையாளருடன் விண்ணப்பதாரர் போட்டுக்கொண்ட வாடகை ஒப்பந்தம் இணைக்கப்பட வேண்டும். அது ரூ.100 மதிப்புள்ள முத்திரைத்தாளில் நோட்டரி பப்ளிக் அலுவலரின் ஒப்புதலுடன் இருக்க வேண்டும்.
4/5
பட்டாசு கடை விதிமுறைகள்
பொதுபணித்துறை, பிற துறைகள் அல்லது மாநகராட்சியின் இடத்தில் இந்த பட்டாசு கடைகள் அமைய இருந்தால், அந்த துறை சார்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம், ஏற்பு உறுதி ஆவணம் சமர்பிக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை ஆகியவையின் நகலும் சமர்பிக்க வேண்டும். அதேபோல் விண்ணப்ப உரிமக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும், இந்த கட்டணம் திருப்பித் தரமாட்டாது.
5/5
பட்டாசு கடை விதிமுறைகள்
முழுமையான விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களையும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி பிற்பகலுக்குள் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நகல்களுடன் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். அதன் பின், களவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிய விதிகள் பின்பற்றினால் மட்டும் உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.