• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் HRA எவ்வளவு அதிகரிக்கும்?

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் HRA எவ்வளவு அதிகரிக்கும்?

Written BySripriya Sambathkumar
Published: Aug 25, 2026, 04:02 PM IST|Updated: Aug 25, 2026, 04:10 PM IST
joinshare
HRA for Central Government Employees: ஃபிட்மென்ட் ஃபாக்டர் HRA-வை நேரடியாகத் தீர்மானிப்பதில்லை என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம். இது அடிப்படை ஊதியத்தை மட்டுமே உயர்த்துகிறது.

Central Government Employees News: தற்போது, ​​வீட்டு வாடகைப்படி விகிதங்கள் பின்வருமாறு உள்ளன: 'X' வகை நகரம்: 30%, 'Y' வகை நகரம்: 20%, 'Z' வகை நகரம்: 10%. 8வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபேக்டர் (fitment factor) 2x, 2.5x மற்றும் 3x ஆக நிர்ணயிக்கப்பட்டால், வீட்டு வாடகைப்படி எப்படி அதிகரிக்கும் என இந்த பதிவில் காணலாம்.

Central Government Employees1/7

மத்திய அரசு ஊழியர்கள்

சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் 8-வது ஊதியக் குழு தொடர்பான 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' (fitment factor) குறித்த அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால், அடிப்படை ஊதிய உயர்வு வீட்டு வாடகைப்படியிலும் (HRA) உயர்வை ஏற்படுத்தக்கூடும்.
House Rent Allowance2/7

வீட்டு வாடகைப்படி

​​7-வது ஊதியக் குழுவின் கீழ், நகரங்களின் வகையைப் பொறுத்து வீட்டு வாடகைப்படி (HRA) நிர்ணயிக்கப்படுகிறது. 'X' வகை நகரங்கள் அதிகபட்ச வீட்டு வாடகைப்படியைப் பெறுகின்றன. 'Y' மற்றும் 'Z' வகை நகரங்கள் முறையே குறைவான அளவிலான படிகளைப் பெறுகின்றன. 8-வது ஊதியக் குழுவின் கீழ் இறுதி வீட்டு வாடகைப்படி விகிதங்கள், அக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் அதைத் தொடர்ந்து அரசு அளிக்கும் ஒப்புதலுக்குப் பின்னரே தீர்மானிக்கப்படும்.
HRA Increase3/7

வீட்டு வாடகைப்படி (HRA) அதிகரிக்குமா?

தற்போது, ​​வீட்டு வாடகைப்படி விகிதங்கள் பின்வருமாறு உள்ளன: 'X' வகை நகரம்: 30%, 'Y' வகை நகரம்: 20%, 'Z' வகை நகரம்: 10%. 8வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபேக்டர் (fitment factor) 2x, 2.5x மற்றும் 3x ஆக நிர்ணயிக்கப்பட்டால், வீட்டு வாடகைப்படி எப்படி அதிகரிக்கும் என இந்த பதிவில் காணலாம். எனினும், இவை ஆரம்பக்கட்டக் கணக்கீடுகள் மட்டுமே என்பதையும், இறுதி முடிவு அரசால் எடுக்கப்படும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
Level 4 Central Government Employees4/7

லெவல் 4 மத்திய அரசு ஊழியர்கள் (2.0 ஃபிட்மென்ட் ஃபாக்டர்)

இந்த கணக்கீடுகளுக்கு லெவல் 4 மத்திய அரசு ஊழியரின் ஊதிய நிலையை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். 2.0 ஃபிட்மென்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்பட்டு, நிலை-4 ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ. 51,000 என்று வைத்துக்கொண்டால், HRA கணக்கீடு பின்வருமாறு அமையும்: X (30%): மதிப்பிடப்பட்ட HRA - ரூ. 15,300 / Y (20%): மதிப்பிடப்பட்ட HRA - ரூ. 10,200 / Z (10%): மதிப்பிடப்பட்ட HRA - ரூ. 5,100.
2.5 Fitment Factor5/7

2.5 ஃபிட்மென்ட் ஃபாக்டர்

அதே ஊழியருக்கு 2.5 ஃபிட்மென்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்பட்டு, அடிப்படை ஊதியம் ரூ. 63,750 ஆக உயர்ந்தால், HRA-வும் அதற்கேற்ப அதிகரிக்கும்: X (30%): மதிப்பிடப்பட்ட HRA - ரூ. 19,125 / Y (20%): மதிப்பிடப்பட்ட HRA - ரூ. 12,750 / Z (10%): மதிப்பிடப்பட்ட HRA - ரூ. 6,375. இதன் மூலம், 2.0 முதல் 2.5 வரையிலான மதிப்பிடப்பட்ட ஃபிட்மென்ட் ஃபாக்டர்களின் அடிப்படையில், X நகரத்தில் HRA சுமார் ரூ. 3,825-ம், Y நகரத்தில் ரூ. 2,550-ம், Z நகரத்தில் ரூ. 1,275-ம் அதிகரிக்கக்கூடும் என்பது தெரியவருகிறது.
HRA Increase6/7

HRA அதிகரிப்பு எதைக் குறிக்கிறது?

பல ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். இருப்பினும், HRA அதிகரிப்பு மாதந்தோறும் அவர்களுக்கு கையில் கிடைக்கும் ஊதியத்தையும் (take-home pay) பாதிக்கிறது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் உயர்ந்தால், HRA தொகையும் அதிகரிக்கும்.
Fitment Factor7/7

ஃபிட்மென்ட் ஃபாக்டர்

ஃபிட்மென்ட் ஃபாக்டர் HRA-வை நேரடியாகத் தீர்மானிப்பதில்லை என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம். இது அடிப்படை ஊதியத்தை மட்டுமே உயர்த்துகிறது. HRA என்பது அந்த உயர்த்தப்பட்ட அடிப்படை ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாகும். ஆகையால், ஊதியக் குழுவின் பரிந்துரைகள் வெளியான பின்னரே, இறுதி ஊதிய உயர்வு குறித்த துல்லியமான விவரங்கள் தெரியவரும்.
TAGS:
Personal Finance

Trending

  • News
  • Photos
  • Videos
திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

2

கார் புதுசா வாங்கப்போறீங்களா? என்னென்ன மாடல்கள், என்னென்ன விலை? விவரம் இங்கே

3

2014இல் பும்ராவை ஆர்சிபி அணி தவறவிட்ட கதை... பார்த்தீவ் பட்டேல் சொன்னது!

4

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ஊதியம், நிலுவைத் தொகை, ஓய்வு வயது குறித்த முழு விவரம்!

5

மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தல்: பாஜகவின் சாதனை வெற்றி - முடிவுகள் இதோ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.