TNPSC Group 1 Hall Ticket: குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. எனவே, ஹால் டிக்கெட்டை எப்படி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளங்கள்.
TNPSC Group 1 Hall Ticket: செப்டம்பர் 27ஆம் தேதி குரூப் 1 தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது.
1/5
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு பதவிகளுக்கான முதற்கட்டத் தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுக்காக பலரும் தயாராகி வருகின்றனர்.
2/5
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு
இந்த நிலையில், குரூப் 1 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் நுழைவுச்சீட்டை டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
3/5
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 05/2026, நாள் 23.06.2026-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-(தொகுதி- பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலை (கொள்குறி வகை) (ஒளிக்குறி உணரி) தேர்வு 27.09.2026 முற்பகல் நடைபெற உள்ளது.
4/5
குரூப் 1 நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளம் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
5/5
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள்
டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒருமுறை பதிவு பகுதிக்கு செல்ல வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். இதனை அடுத்து, திரையில் தோன்றும் உங்களுடைய ஹால் டிக்கெட்டை சரிபார்த்து, அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளலாம்.