கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 3 திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
தமிழ் திரையுலகில், முக்கிய நடிகராகவும் மூத்த நடிகராகவும் வலம் வருபவர், கமல்ஹாசன். இவர், ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 1 மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். தற்போது அந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்த தகவலைத்தான் இங்கு பார்க்கப்போகிறோம்.
1/5
இந்தியன் 1 படத்தில் கமல்ஹாசன்
90களில் வெளியான இந்தியன் திரைப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். அதில், நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்தார். அதுவும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெறும் தோல்வி அடைந்தது.
2/5
இந்தியன் 2 தோல்வி
இந்தியன் 2 திரைப்படம், கிட்டத்தட்ட 26 ஆண்டுகால இடைவேளைக்கு பிறகு வெளியானது. பழைய படத்திலேயே முதுமையான தோற்றத்தில் இருந்த சேனாபதி தாத்தா, இந்த படத்தில் இன்னும் முதுமையாக இருந்தார். இருந்த போதிலும், அவர் பலம் வாய்ந்தவராக காண்பிக்கப்பட்டது மக்களுக்கு நெருடலை ஏற்படுத்தியது.
3/5
இந்தியன் 3 வரலாற்று படம்
இந்தியன் 3 திரைப்படத்தின் ட்ரெயிலர் போன்ற ஃப்ளாஷ்பேக் காட்சி, இரண்டாம் பாகத்தின் இறுதியில் சேர்க்கப்பட்டிருந்தது. இந்தியன் 3 மொத்த படத்தை விட, இறுதியில் சேர்க்கப்பட்டிருந்த அந்த காட்சியைத்தான் பலரும் விரும்பினர்.
4/5
இந்தியன் மூன்றாம் பாகம் அறிவிப்பு
இந்தியன் 2 படம் தோல்வியுற்றதால், அதன் மூன்றாம் பாகம் வெளிவருமா இல்லையா என்கிற குழப்பம் நிலவியது. தற்போது படத்தயாரிப்பு நிறுவனமான லைகா, ஒரு புதிய தகவலை வெளியிட்டிருக்கிறது. அதில், படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
5/5
இந்தியன் 3 ஷூட்டிங் முடிந்து விட்டது
இந்தியன் 2- இந்தியன் 3 ஆகிய இரண்டு படங்களுக்கான பெரும்பகுதி காட்சிகள் ஏற்கனவே ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு விட்டன. இருப்பினும், அதில் மீதமிருக்கும் சில காட்சிகளில் பேட்ச்வொர்க் செய்ய வேண்டும் என்பதால், பெரிதாக படப்பிடிப்பு தேவையில்லை என்று கூறப்படுகிறது.