ஐபிஎல் 2027 மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி கோவாவில் நடைபெற இருக்கிறது. ஏலத்தை முன்னிட்டு நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஐபிஎல் அணிகள் வீரர்கள் விடுவிக்கும் பட்டியலை சமர்பிக்க வேண்டும். இந்நிலையில், இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் ஏலத்திற்கு முன் எப்போதும் ஐபிஎல் அணிகள் சில வீரர்களை தக்கவைத்து, சில வீரர்களை விடுவிக்கும். 2027 ஐபிஎல் சீசனுக்கு முன் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், மினி ஏலத்தில் குறைவான வீரர்களே கிடைப்பார்கள் என்பதால், ஒவ்வொரு அணியும் மிகச் சில வீரர்களையே விடுவிக்கும்.
1/5
ஐபிஎல் 2027 மினி ஏலம்
ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி கோவாவில் நடைபெற இருக்கிறது. மினி ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவைப்படாத வீரர்களை விடுவிப்பார்கள். இதனால் ஏலத்தில் அவர்களின் பர்ஸ் தொகை உயரும், இதன்மூலம் அவர்களால் புதிய வீரர்களை எடுத்து ஸ்குவாடை பலப்படுத்த முடியும்.
2/5
வீரர்கள் விண்ணப்பக் காலம் தொடக்கம்
மினி ஏலத்தை முன்னிட்டு இன்று வீரர்கள் விண்ணப்பக் காலம் இன்று தொடங்கி உள்ளது. வரும் நவம்பர் 23ஆம் தேதிவரை வீரர்கள் ஏலத்திற்கு விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 1ஆம் தேதிக்குள் ஐபிஎல் அணிகள் தாங்கள் எடுக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை சமர்பிக்க வேண்டும். யார் யார்...? எந்தெந்த வரிசையில்...? ஏலம் விடப்படுவார்கள் என்ற பட்டியல் டிசம்பர் 3ஆம் தேதி அன்று வெளியாகும்.
3/5
நவம்பர் 17 வரை நீட்டிப்பு
இந்நிலையில், ஏலத்திற்கு முன் ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலையும், விடுவிக்கும் வீரர்களின் பட்டியலையும் பிசிசிஐயிடம் சமர்பிக்க வேண்டும். இதற்கு ஆரம்பத்தில் நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த காலக்கெடு நவம்பர் 17ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
4/5
மினி ஏலம் அன்று நடக்கும் ஓடிஐ போட்டி
நவம்பர் 15ஆம் தேதி அன்று இந்தியா - நியூசிலாந்து கடைசி மற்றும் 5வது ஓடிஐ போட்டி நடைபெற இருப்பதால், இந்த காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. குறிப்பாக, மினி ஏலம் நடைபெறும் டிசம்பர் 16ஆம் தேதி அன்று இந்தியா - இலங்கை 2வது ஓடிஐ போட்டி பெங்களூருவில் நடைபெற இருக்கிறது. இன்னும் இந்த போட்டி தள்ளிவைக்கப்படவில்லை.
5/5
டிரேட் காலகட்டம்
ஐபிஎல் மினி ஏலத்திற்கு ஒரு வாரம் முன்பு வரை, ஐபிஎல் அணிகள் வீரர்களை டிரேட் நடைபெறும். மினி ஏலம் முடிந்து ஒரு வாரத்தில் இருந்து அடுத்த ஐபிஎல் சீசனின் ஒரு மாதத்திற்கு முன்வரை வீரர்களை ஐபிஎல் அணிகள் டிரேட் செய்யலாம். ஹர்திக் பாண்டியா டிரேட் மினி ஏலத்திற்கு பின் கூட நடைபெற வாய்ப்புள்ளது.