• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /மாதச் சம்பளத்தில் எவ்வளவு சேமிக்கலாம்? நீங்கள் எந்த வகை சேமிப்பாளர்? Kwala Intel AI சொல்லும் சூத்திரம்

மாதச் சம்பளத்தில் எவ்வளவு சேமிக்கலாம்? நீங்கள் எந்த வகை சேமிப்பாளர்? Kwala Intel AI சொல்லும் சூத்திரம்

மாதச் சம்பளத்தில் எவ்வளவு சேமிக்கலாம்? உங்கள் வாழ்க்கைமுறைக்கு ஏற்ற சொத்து ஒதுக்கீடு எது? Kwala Intel AI தளம் விளக்கம் 3 வகையான சேமிப்பாளர்களுக்கான உத்திகள் ஆகியவை குறித்து இங்கு விரிவாக காணலாம்.

Written BySudharsan G
Published: Nov 02, 2026, 10:03 PM IST|Updated: Nov 02, 2026, 10:09 PM IST
joinshare
மாதச் சம்பளத்தில் எவ்வளவு சேமிக்கலாம்? நீங்கள் எந்த வகை சேமிப்பாளர்? Kwala Intel AI சொல்லும் சூத்திரம்
Image Credit: AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தீபாவளிக்கு 20% போனஸ் - CM விஜய் அறிவிப்பு... குஷியில் கூட்டுறவு பணியாளர்கள்

தீபாவளிக்கு 20% போனஸ் - CM விஜய் அறிவிப்பு... குஷியில் கூட்டுறவு பணியாளர்கள்

2

மாதச் சம்பளத்தில் எவ்வளவு சேமிக்கலாம்? நீங்கள் எந்த வகை சேமிப்பாளர்? Kwala Intel AI சொல்லும் சூத்திரம்

3

தூக்கத்திலேயே உயிரிழந்த 33 வயது பிரபல நடிகர்! சோகத்தில் திரையுலகம்..

4

'மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்' சர்ச்சையை கிளப்பிய பேச்சுக்கு... அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்

5

புல்லட் ரயில் B28: சென்னைக்கும் வருது.. சிறப்பம்சங்கள் என்னென்ன? Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சம்பாதிக்கும் பணத்தில் எவ்வளவு சேமிக்க வேண்டும்?மாதச் சம்பளத்தில் எவ்வளவு செலவுகளுக்காக ஒதுக்க வேண்டும்? எதிர்காலத் தேவைகளுக்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். இன்றைய சூழலில், பலரும் எதிர்கொள்ளும் முக்கியமான நிதி சார்ந்த சந்தேகங்கள் இவை.

சம்பளம் அதிகமாக இருந்தால் மட்டுமே ஒருவரால் அதிகம் சேமிக்க முடியும் என்று சொல்ல முடியாது. வருமானம், குடும்பப் பொறுப்புகள், மாதாந்திரச் செலவுகள், கடன் சுமை மற்றும் எதிர்கால இலக்குகள் ஆகியவை ஒருவரின் சேமிப்புத் திறனை தீர்மானிக்கின்றன. எனவே, அனைவருக்கும் ஒரே மாதிரியான சேமிப்பு திட்டம் சரியாக இருக்காது.

மாதந்தோறும் எவ்வளவு சேமிக்கலாம்?

இதில் ஒவ்வொருவரும் ஒரு பதிலை சொல்லலாம். ஆனால், நிதி ஆலோசனைக்கு என பிரத்யேகமான Kwala Intel செயற்கை நுண்ணறிவு தளம் இதற்கு உரிய மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த பதிலை வழங்கி உள்ளது. அந்த வகையில், மக்களை மூன்று வகையாக பிரித்து, அவரவருக்கு ஏற்பட சேமிப்பு திட்டத்தை வழங்கி உள்ளது. எனவே, அதில் நீங்கள் எந்த வகை என்பதை தெரிந்துகொண்டு, அதற்கேற்ப சேமிப்பை மேற்கொள்ளுங்கள்.

மூன்று வகையான சேமிப்பாளர்கள் - Kwala Intel

1. தீவிர சேமிப்பாளர்

இவர் தற்போதைய மகிழ்ச்சியை விட எதிர்கால நிதிப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர்கள். எதிர்காலத்தில் பணத்தைப் பற்றிய கவலையின்றி வாழவும், விரைவாக நிதிச் சுதந்திரத்தை அடையவும் இன்றைய சில செலவுகளைத் தவிர்க்கத் தயாராக இருப்பார்கள்.

எவ்வளவு சேமிக்கலாம்?: தங்களுடைய வருமானத்தில் 30% - 50% வரை சேமித்து, அதிக வருமான வாய்ப்புகள் கொண்ட முதலீடுகளில் ஈடுபடுபவர்கள். அதேநேரத்தில், அதிக வருமான வாய்ப்புகளுடன் முதலீட்டு அபாயங்களும் இருக்கலாம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஓய்வுக்காலத்திற்காக முன்கூட்டியே நிதி சேர்ப்பது, விரைவாக நிதிச் சுதந்திரத்தை அடைவது போன்றவை இவர்களின் முக்கிய இலக்குகளாக இருக்கலாம்.

2. சமநிலையுடன் சேமிப்பவர்கள்

இவர்கள் பணத்தை செலவிடுவதில் தயக்கம் காட்ட மாட்டார்கள். அதேநேரத்தில் தேவையற்ற செலவுகளிலும் ஈடுபட மாட்டார்கள். அன்றாட வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பதுடன், சொந்த வீடு வாங்குவது, குழந்தைகளின் கல்விக்காகப் பணம் சேர்ப்பது, கார் வாங்குவது போன்ற பெரிய இலக்குகளுக்காகவும் சேமிப்பார்கள்.

எவ்வளவு சேமிக்கலாம்?: இவர்கள் தங்களின் மாத வருமானத்தில் 20% - 30% வரை சேமிப்பார்கள்

தற்போதைய தேவைகளையும், எதிர்கால கனவுகளையும் சமநிலைப்படுத்த விரும்புபவர்களுக்கு இந்த அணுகுமுறை பொருத்தமானதாக இருக்கலாம்.

3. வாழ்பவனுங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்

இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை, இன்றே அனைத்தையும் கொண்டாடு என்பது இவர்களின் கொள்கை. இவர்கள் நிகழ்காலத்திற்காக மட்டும் வாழ்பவர்கள். அன்றாட வாழ்க்கை முறையில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள மாட்டார்கள். அதேநேரத்தில் சிறிய சேமிப்பு பழக்கங்களை உருவாக்கி எதிர்காலத்திற்கு தேவையான பணத்தைச் சேர்க்க முயற்சிப்பார்கள்.

எவ்வளவு சேமிக்கலாம்?: தங்களுடைய வருமானத்தில் சுமார் 10% - 15 வரை சேமிக்கலாம்.

இதன்மூலம், எதிர்காலத்தின் அடிப்படைத் தேவைகளுக்குப் பணம் சேர்ப்பதுடன் நிகழ்கால வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் தொடர்ந்து அனுபவிக்க விரும்புவார்கள்.

பணத்தைச் சரியான இடத்தில் முதலீடு செய்வது எப்படி?

சேமிப்பது மட்டுமல்ல சேமித்த பணத்தை எவ்வாறு பிரித்து முதலீடு செய்கிறோம் என்பதும் முக்கியம். இதனை சொத்து ஒதுக்கீடு என்று அழைக்கிறார்கள். முதலீட்டைத் தொடங்குவதற்கு முன்பு, அதிக வட்டி கொண்ட கடன்கள், குறிப்பாக கிரெடிட் கார்டு நிலுவைகள் போன்றவற்றை முதலில் கட்டுப்படுத்துவது குறித்துத் திட்டமிட வேண்டும்.

அதேபோல், எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்க அவசரகால நிதியையும் உருவாக்க வேண்டும். முதலீட்டுக்கான தொகையைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரிப்பது குறித்து ஆராயலாம்.

தீவிரமாகச் சேமிப்பவர்கள்: 80% பங்குகல் அல்லது பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகள் போன்ற முதலீடுகளிலும்; 20% கடன் சார்ந்த முதலீடுகள் போன்ற ஒப்பீட்டளவில் நிலைத்தன்மை கொண்டு பிரிவிகளிலும் முதலீடு செய்யலாம்.

சமநிலையுடன் சேமிப்பவர்கள்: 60% பங்குகள் அல்லது பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில், 40% கடன் சார்ந்த அல்லது ஒப்பீட்டளவில் பாதுகாப்பான முதலீடுகளில் பணத்தை போடலாம்.

தினந்தினம் ஜாலியாக இருப்பவர்கள்: 30% பங்குகள் அல்லது பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும்; 70% ஒப்பீட்டளவில் பாதுகாப்பான முதலீடுகள் அல்லது வங்கி சார்ந்த சேமிப்புகளிலும் பணத்தை போடலாம்.

இவை அனைத்தும் Kwala Intel பரிந்துரை ஆகும். அவை அனைவருக்கும் பொருந்தும் தனிப்பட்ட முதலீட்டுப் பரிந்துரைகள் அல்ல. பங்குச் சந்தை முதலீடுகளில் இழப்புகல் ஏற்பபடலாம். முதலீட்டுத் தேர்வு நிதி இலக்குகள், முதலீட்டுக் காலம் மற்றும் அபாயத்தைத் தாங்கும் திறனுக்கு ஏற்ப வைத்துக்கொள்ள வேண்டும். 

அடுத்த சில ஆண்டுகளிலேயே தேவைப்படும் பணத்தை முழுவதுமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை தவிர்த்து, அந்தத் தேவைக்கு ஏற்ற அளவில் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான வாய்ப்புகளையும் பரிசீலிப்பது அவசியம்.

Kwala Intel AI தளம்

மாதாந்தோறும் எவ்வளவு சேமிக்க வேண்டும், எந்த நிதி இலக்குக்கு எவ்வளவு பணம் தேவைப்படும், ஓய்வுக்காலத்திற்காக எவ்வாறு திட்டமிடலாம். பங்குச் சந்தை மற்றும் முதலீடுகள் குறித்து எப்படி தகவல்களைப் பெறலாம் என பல கேள்விகள் எழலாம்.

இவற்றை ஆராய்ந்து புரிந்துகொள்ள Kwala Intel AI தளம் உதவக்கூடும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் பங்குச்சந்தை மற்றும் ஓய்வுக்கால நிதித் திட்டமிடல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வசதிகளை இது வழங்குகிறது.

பணவீக்கத்தை தாண்டி சேமிப்பது அவசியம்

இன்று 100 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளின் விலை நாலை இன்னும் அதிகமாகிவிடும். இதுதான் பணவீக்கம் எனப்படுகிறது. உங்கல் பணத்தை முழுவதுமாக ஒரு வங்கி சேமிப்புக் கணக்கில் அப்படியே வைத்திருந்தால், பணவீக்கம் மெதுவாக உங்கள் பணத்தின் மதிப்பை குறைத்துவிடும்.

அதனால்தான் நீண்டகால இலக்குகளை அடைய, சிறிதளவு எமர்ஜென்சி நிதியை சரியான இடத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம் என்று Kwala Intel தளம் கூறுகிறது. அப்போதுதான் பணவீக்கம் அதிகரிக்கும் அதே வேகத்தில் உங்கள் பணமும் வளரும்.

Kwala Intel-ஐ இப்போதே முயற்சித்துப் பாருங்கள்: https://kwalaintel.com/in/

1000 ரூபாய் சந்தா செலுத்தி வரம்பற்ற AI பங்குச் சந்தை மற்றும் ஓய்வுக்கால ஆய்வு வசதிகள் குறித்த கூடுதல் விவரங்களை Kwala Intel இணையதளத்தில் அறிந்துகொள்ளுங்கள்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Personal Finance