ராக்ஸ்டார் அனிருத், சமீபத்தில் காவ்யா மாறனை கிரீஸில் திருமணம் செய்து கொண்டு, தற்போது சென்னை திரும்பியுள்ளார். இதையடுத்து அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து ஒரு முக்கிய முடிவினை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
பிரபல இசையமைப்பாளரான அனிருத், தன் நீண்ட நாள் காதலியான காவ்யா மாறனை கிரீசில் கரம் பிடித்தார். இவர்களுடைய திருமண வரவேற்பு வரும் 21ஆம் தேதி நடைபெறுவதை அடுத்து, அவர் தன்னுடைய திரைவாழ்க்கையில் இருந்து பிரேக் எடுப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
அனிருத் காவ்யா மாறன் திருமணம்
இசையமைப்பாளர் அனிருத்திற்கு, சமீபத்தில் பிரபல தொழிலதிபர் காவ்யா மாறனுடன் திருமணம் ஆனது. இவர்களின் திருமணத்தில் ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சில நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். வரும், 21ஆம் தேதி இவர்களுக்கு திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது.
2/5
அனிருத் பிரேக் எடுக்கப்போவதாக வதந்தி
தன்னுடைய திருமணத்திற்கு பிறகு அனிருத் சில காலம் ஓய்வில் இருக்கப்போவதாக கூறப்படுகிறது. இதன்பின்னர், 2027ஆம் ஆண்டில் அவர் மீண்டும் திரையுலகில் இசையமைக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
3/5
அனிருத் 15 ஆண்டுகால திரையுலக அனுபவம்
அனிருத், 3 திரைப்படம் மூலம் திரையுலகிற்கு வந்தார். இவர், திரையுலகில் பிரவேசித்து தற்போது 15 ஆண்டுகள் ஆகி விட்டது. இதையடுத்து, அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருக்கும் விஷயம் என்ன தெரியுமா?
4/5
அனிருத்தின் சமீபத்திய அறிக்கை
“இன்றோடு 15 ஆண்டுகள் ஆகின்றன; அன்றுதான் எங்களது முதல் பாடல் உலகிற்கு அறிமுகமானது. அன்றிலிருந்து இன்றுவரை, இடைவிடாத, தடையற்ற ஒரு பயணமாக இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. 15 ஆண்டுகால இசை, நினைவுகள், கொண்டாட்டங்கள் மற்றும் மாயாஜாலம்! தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் எனப் பல மொழிகளைக் கடந்து, ஒரு இதயத்திலிருந்து கோடிக்கணக்கான உங்களைச் சென்றடைந்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கும் அவர், ”இந்த நீண்ட பயணத்தில், நாட்டின் மிகச்சிறந்த இயக்குநர்கள், நட்சத்திரங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது; அந்தத் துறையின் மிகச்சிறந்த கலைஞர்களுடன் இணைந்து இசையையும், அழியாத நினைவுகளையும் உருவாக்கியுள்ளோம்” எனவும் தெரிவித்திருக்கிறார்.
5/5
சர்ச்சைகளுக்கு பதிலளித்த அனிருத்
தொடர்ந்து, ”வெற்றிகள், சவால்கள் என எது வந்தாலும், ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல் தொடர்ந்து பயணித்து வருகிறோம்; இனியும் ஓய்வெடுக்கும் எண்ணம் இல்லை. இசையின் மீது கொண்ட அதே தீராத காதல்தான் எங்களை இன்றும் இயங்க வைக்கிறது :)
எங்களிடம் இருப்பது ஆழ்ந்த நன்றியுணர்வு மட்டுமே. எங்கள் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டு, எங்களுடன் இணைந்து பாடி, கொண்டாடி, ஆதரவளித்து, எங்கள் மீது நம்பிக்கை வைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த பயணம் எங்களுடையது மட்டுமல்ல, உங்களுடையதும்தான்!
15 ஆண்டுகள் நிறைவு. எண்ணற்ற நினைவுகள். இன்னும் அடைய வேண்டிய பல மில்லியன் கனவுகள்” என்று தெரிவித்திருக்கிறார். இதனால் அவர் பிரேக் எடுக்கபோகும் தகவல் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.