• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /த்ரிஷாவுக்கு ரகசியத் திருமணமா? வைரலாகும் லண்டன் புகைப்படம்!

த்ரிஷாவுக்கு ரகசியத் திருமணமா? வைரலாகும் லண்டன் புகைப்படம்!

Written ByR Balaji
Published: Oct 09, 2026, 03:05 PM IST|Updated: Oct 09, 2026, 03:08 PM IST
joinshare

லண்டனில் நடிகை ராதிகாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியில் த்ரிஷா அணிந்திருந்த செயினைப் பார்த்து, அவரது கழுத்தில் இருப்பது தாலியா என ரசிகர்கள் மீண்டும் திருமண வதந்திகளை கிளப்பத் தொடங்கியுள்ளனர்.
 

Tamil Cinema1/5

த்ரிஷா கழுத்தில் தாலியா?

நடிகை த்ரிஷாவின் புதிய புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், அவரது கழுத்தில் இருப்பது தாலியா என சமூக வலைதளங்களில் விவாதிக்க தொடங்கியுள்ளனர். கடந்த 5 மாதங்களில் இரண்டாவது முறையாக த்ரிஷாவின் திருமணம் குறித்த பேச்சு எழுந்துள்ளது. ஆனால், அவர் திருமணம் செய்துகொண்டதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
Tamil Cinema2/5

லண்டனில் த்ரிஷா.. ராதிகாவுடன் செல்ஃபி!

தற்போது இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் படத்தில் நடித்து வரும் த்ரிஷா, படப்பிடிப்புக்காக லண்டனில் தங்கியுள்ளார். அங்கு தன்னுடன் நடிக்கும் நடிகை ராதிகா சரத்குமாருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். இந்தப் புகைப்படத்தில் த்ரிஷா அணிந்திருந்த செயின்தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Tamil Cinema3/5

செயினில் இருந்த டாலர்.. ரசிகர்கள் எழுப்பிய கேள்வி!

த்ரிஷாவின் கழுத்தில் இருக்கும் செயின் தாலியாக இருக்குமோ என்றும், புகைப்படத்தில் ஹார்ட்டின் எமோஜி மூலம் டாலர் மறைக்கப்பட்டிருக்கிறதோ என்றும் சிலர் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துவரும் ரசிகர்கள், கழுத்தில் செயின் அணிந்திருப்பதை மட்டும் வைத்து திருமணம் நடந்துவிட்டதாக கூற முடியாது எனத் தெரிவிக்கின்றனர். திருமணம் குறித்த தகவல் இருந்தால் த்ரிஷாவே வெளிப்படையாக அறிவிப்பார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
Tamil Cinema4/5

5 மாதங்களுக்கு முன்பும் இதே சர்ச்சை!

கடந்த ஜூன் மாதத்திலும் த்ரிஷாவின் திருமணம் குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின. அப்போது ஒரு நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த ஹார்ட்டின் டாலர் கொண்ட செயினை பார்த்த சிலர், அது தாலியாக இருக்கலாம் என பேசினர். ஆனால், இந்தக் கருத்துகளுக்கு த்ரிஷா எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதற்கு முன்பும் அவரது திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், அவை எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
Tamil Cinema5/5

மீண்டும் திருமண வதந்தி.. ரசிகர்கள் விவாதம்!

தற்போது லண்டனில் படப்பிடிப்பில் இருக்கும் த்ரிஷா, ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் வாசிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவரது திருமணம் குறித்த பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. மேலும், லண்டனில் நடைபெற்ற அஜித் குமாரின் கார் பந்தயத்தை த்ரிஷா பார்வையிட்டது குறித்தும் ரசிகர்கள் பேசி வந்தனர். இந்நிலையில், புதிய புகைப்படத்தை வைத்து எழுந்துள்ள தாலி சர்ச்சைக்கு த்ரிஷா ஏதேனும் விளக்கம் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
தாராபுரத்தில் தவெக வெற்றி; குறைந்தது வெற்றி வித்தியாசம் - 3வது இடத்தில் அதிமுக

தாராபுரத்தில் தவெக வெற்றி; குறைந்தது வெற்றி வித்தியாசம் - 3வது இடத்தில் அதிமுக

2

57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

3

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

4

பிரதமர் மோடி சென்னை வருகை: SPG குழுவின் கட்டுப்பாட்டில் சென்ற விமான நிலையம்

5

புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு - தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.