தென்னாப்பிரிக்காவின் SA20 தொடரின் ஏலத்தில் மூத்த வீரர் கைரன் பொல்லார்டை ஜோபெர்க் சூப்பர் கிங்ஸ் அணி எடுத்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
2010ஆம் ஆண்டில் இருந்து கடந்த 16 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பயணித்து வருபவர் கைரன் பொல்லார்ட். அவரை சூப்பர் கிங்ஸ் அணி SA20 ஏலத்தில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
1/6
SA20 சீசன் 5 ஏலம்
2027ஆம் ஆண்டுக்கான SA20 தொடரின் ஏலம் இன்று நடைபெற்றது. பார்ல் ராயல்ஸ் அணியை தவிர 4 அணிகளும் இந்த ஏலத்தில் பங்கேற்றன. 4 அணிகளில் மொத்தம் 19 வீரர்களுக்கு மட்டுமே இடம் இருந்தது. 156 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
2/6
4 அணிகள்... 19 வீரர்கள் தேவை
ஜேஎஸ்கே 6 இடங்களுக்கு 1.245 மில்லியன் அமெரிக்க டாலருடன் ஏலத்திற்கு 6 வீரர்களை எடுக்க வந்தது. எம்ஐ கேப்டவுண் அணி 5,65,150 அமெரிக்க டாலருடன் 6 வீரர்களையும், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 2,17,600 அமெரிக்க டாலருடன் 2 வீரர்களையும், பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி 89,150 அமெரிக்க டாலருடன் 5 வீரர்களையும் எடுக்க ஏலத்திற்கு வந்தது. பார்ல் ராயல்ஸ் அணியில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன.
3/6
SA20 அணிகளின் ஸ்குவாட்
அதிலும் எம்ஐ கேப்டவுண் அணியும், ஜேஎஸ்கே அணியும் 23 வயதுக்குட்பட்டோருக்கான வீரர்களுள் தலா ஒருவரை ஒப்பந்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அணியின் ஸ்குவாடிலும் 11 தென்னாப்பிரிக்க வீரர்களும், 7 வெளிநாட்டு வீரர்களும் என 18 வீரர்கள் இடம்பிடிக்க வேண்டும். 11 தென்னாப்பிரிக்க வீரர்களில் இரண்டு U-23 வீரர்களும் இடம்பிடிக்க வேண்டும். மேலும், 18 வீரர்களை தாண்டி கூடுதலாக ஒரு வீரரை Wildcard வீரராக எடுக்க வேண்டும்.
4/6
ஜேஎஸ்கே எடுத்த வீரர்கள்
இன்று நடந்த ஏலத்தில் ஜேஎஸ்கே அணி பாப் டூ பிளெசிஸ், பிளஸ்ஸிங் முசரபானி, ஜேசன் ரோவ்ல்ஸ், ஆண்ட்ரீஸ் கௌஸ், தயான் கலீம், கீரன் பொல்லார்ட் ஆகியோரை எடுத்திருக்கிறது. ஏலத்திற்கு வெளியே ஒரு வீரரை Wild Card வீரராக ஜேஎஸ்கே ஒப்பந்தம் செய்தது. இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் ஜேமி ஓவர்டனை ஜேஎஸ்கே ஒப்பந்தம் செய்தது. U-23 வீரரான ஜேசன் ரோவ்ல்ஸ் அதிக பணம் கொடுத்து எடுக்கப்பட்ட வீரர் ஆவார்.
5/6
16 ஆண்டுகளுக்கு பின்...
இதில் ஜேஎஸ்கே அணி பொல்லார்டை ஒப்பந்தம் செய்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. ஜேஎஸ்கே அணியின் தாய் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), எம்ஐ கேப்டவுன் அணியின் தாய் அணியான மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் பரம வைரிகள் ஆவர். 2010-2022 வரை எம்ஐ அணியில் விளையாடிய பொல்லார்ட் தற்போது அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார். அவரை தற்போது ஜேஎஸ்கே அணி எடுத்துள்ளது.
6/6
JSK vs MI Cape Town எகிறும் எதிர்பார்ப்பு
ILT20 தொடரில் MI Emirates, MLC தொடரில் MI New York உள்ளிட்ட அணிகளில் பொல்லார்ட் விளையாடினார். SA20 தொடரில் MI Cape Town அணிக்காகவும் விளையாடி உள்ளார். அப்படியிருக்க, ஜேஎஸ்கே அணி பொல்லார்டை பெரும் தொகை (ரூ.87.15 லட்சம்) கொடுத்து எடுத்துள்ளது. 39 வயதான பொல்லார்ட் வரும் 2027 சீசனில் ஜேஎஸ்கே அணிக்காக விளையாடும்போது, MI Cape Town அணிக்கு எதிராக விளையாடும் போட்டியை பார்க்க இப்போதே பலருக்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டது.