Kamarajar Breakfast Scheme : பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், என்னென்ன உணவுகள் பரிமாறப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
Kamarajar Breakfast Scheme : முதலமைச்சர் விஜய் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்ய உள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
1/5
முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் 22.09.2026 அன்று (நாளை) பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை நாளை விரிவாக்கம் செய்ய உள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம் நடுநிலைப் பள்ளியில் நாளை காலை 8.30 மணியளவில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.
2/5
4727 மாணாக்கர்களுக்கும் திட்டம்
இதனையொட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள 518 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 45453 மாணாக்கர்களுக்கும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள 39 பள்ளிகளில் 4727 மாணாக்கர்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
3/5
காமராஜர் காலை உணவுத் திட்டம்
இத்திட்டத்திற்கான முன்னோட்ட சோதனை ஓட்டம் மாவட்ட அளவில் 11.09.2026 அன்று பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ள 557 பள்ளிகளிலும் நடைபெற்றது. அன்று மாணாக்கர்களுக்கு வெண்பொங்கல் காய்கறி சாம்பார் வழங்கப்பட்டது. துவக்க நாளான 22.09.2026 செவ்வாய் கிழமை அன்று இனிப்பு பொங்கல், வெண்பொங்கல் காய்கறி சாம்பார் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
4/5
6 முதல் 8-ஆம் வகுப்பு வரை
காமராஜா் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கப்படுவதன் மூலம் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுமாா் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள், கூடுதலாகப் பயன்பெறுவா். இதற்கென நிகழ் நிதியாண்டில் கூடுதலாக ரூ. 217.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 724 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
5/5
காலை உணவு வழங்கப்படும்
இந்தத் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 447 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக சென்னை மாநகராட்சி நிா்வாகத்தாலும், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள 2,150 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக நகராட்சி நிா்வாக இயக்குநரகத்தாலும் காலை உணவு வழங்கப்படும்.