• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /மதுரையில் கயாது லோஹர்.. “மதுரை உணவு எனக்கு ரொம்ப பிடிக்கும்” தமிழில் பேசி அசத்தல்!

மதுரையில் கயாது லோஹர்.. “மதுரை உணவு எனக்கு ரொம்ப பிடிக்கும்” தமிழில் பேசி அசத்தல்!

Written ByR Balaji
Published: Aug 26, 2026, 18:58 IST|Updated: Aug 26, 2026, 19:02 IST
joinshare

மதுரையில் கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை கயாது லோஹரை காண ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டதுடன், “மதுரை உணவு எனக்கு மிகவும் பிடிக்கும்” என அவர் தமிழில் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
 

Kayadu Lohar1/5

கயாடு லோகர்

மதுரை பைபாஸ் சாலையில் நடைபெற்ற தனியார் கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை கயாது லோஹர் பங்கேற்றார். அவரை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் முன்கூட்டியே அப்பகுதியில் திரண்டதால், கடை அமைந்திருந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
Kayadu Lohar2/5

கயாடு லோகர்

விடுமுறை தினம் என்பதால் காலை முதலே நடிகையின் வருகைக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்த நிலையில், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டன.
Kayadu Lohar3/5

கயாடு லோகர்

கடைக்கு வந்த கயாது லோஹர், அங்கு திரண்டிருந்த ரசிகர்களை பார்த்து உற்சாகமாக பேசினார். நீண்ட நேரம் வெயிலையும் பொருட்படுத்தாமல் தன்னை காண காத்திருந்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த அவர், மதுரை மக்களின் அன்பு தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறினார்.
Kayadu Lohar4/5

கயாடு லோகர்

மேலும், “மதுரை உணவு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று” என தமிழில் பேசியபோது, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதைத்தொடர்ந்து, நடிகை கயாது லோஹர் கடையை திறந்து வைத்து, முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Kayadu Lohar5/5

கயாடு லோகர்

இதற்கிடையே, நடிகையின் வருகையை முன்னிட்டு அதிகளவில் ரசிகர்கள் திரண்டதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் தனியார் பாதுகாவலர்களுக்கு கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கும் பாதுகாப்பு பணியில் இருந்தவர்களுக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
TAGS:
Tamil Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
2027 சனி பெயர்ச்சி:  ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை..  இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

2027 சனி பெயர்ச்சி: ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை.. இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

2

திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

3

சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

4

நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

5

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.