• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /கொடைக்கானலில் இந்த வாகனங்களுக்கு தடை - சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு...

கொடைக்கானலில் இந்த வாகனங்களுக்கு தடை - சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு...

Written BySudharsan G
Published: Nov 04, 2026, 08:33 PM IST|Updated: Nov 04, 2026, 08:37 PM IST
joinshare
கொடைக்கானல் மலை சாலையில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 12 மீட்டர் அளவிற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு மலை சாலையில் தடை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து விரிவாக இங்கு அறிந்துகொள்ளலாம்.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் சீசன் காலகட்டத்தில் அதிகமான சுற்றுலா பயணிகளின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதை தடுக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

 

 

Kodaikanal News1/5

சுற்றுலாவுக்கு ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

வழக்கமாக பண்டிகை காலங்களில் சுற்றுலா தலங்களை நோக்கி பொதுமக்கள் படையெடுப்பார்கள். அதுவும் வெயிலில் வாடும் தமிழ்நாட்டு மக்கள் ஊட்டி, ஏலகிரி, கொடைக்கானல் தொடங்கி கேரளாவில் வயநாடு, மூணாறு என மலைப்பிரதேசங்களை நோக்கி சுற்றுலா செல்வார்கள்.
Kodaikanal News2/5

போக்குவரத்து நெரிசல்

பெரியளவிலான கூட்டு குடும்பத்தினர், அலுவலக பணியாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என பெரும் கூட்டமாகவும் சுற்றுலாவுக்கு செல்வது வழக்கம். இவர்கள் பெரிய ஒற்றை வாகனத்தில் சுற்றுலா தலங்களுக்குச் செல்வார்கள். இதுபோன்ற பெரிய வாகனங்களால் கொண்டு ஊசி வளைவுகள் போன்ற வளைவுகளை கொண்ட மலைப்பிரதேசங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாகிவிடுகிறது.
Kodaikanal News3/5

டிசம்பர் 1 முதல் தடை

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக உள்ள கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 12 மீட்டர் நீளத்திற்கும் அதிகமாக உள்ள Volvo போன்ற பயணியர் வாகனம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனம் ஆகியவை தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Kodaikanal News4/5

எந்தெந்த சாலைகளில் செல்ல முடியாது?

திண்டுக்கல் மாவட்டத்தில் காட்ரோடு முதல் கொடைக்கானல் செல்லும் சாலை; அய்யம்பாளையம் - சித்தரேவு - தாண்டிக்குடி வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை; தருமத்துப்பட்டி - பன்றிமலை - மணலூர் - தாண்டிக்குடி வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை; ஒட்டன்சத்திரம் - பாச்சலூர் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை; பழனி - சவரிக்காடு - வடகவுஞ்சி வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை; பெரியகுளம் கும்பக்கரை பிரிவு - அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை ஆகிய சாலையில் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.
Kodaikanal News5/5

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

எனவே, இந்த இடங்கள் வழியாக கொடைக்கானல் செல்வதற்கு 12 மீட்டர் நீளத்திற்கு அதிகமாக உள்ள Volvo போன்ற பயணியர் வாகனம் மற்றும் சரக்கு வாகனங்களை பயன்படுத்தாமல் 12 மீட்டர் நீளத்திற்கும் குறைவான நீளமுள்ள பயணியர் மற்றும் சரக்கு வாகனங்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.
TAGS:
Tour Travel

Trending

  • News
  • Photos
  • Videos
செஞ்சி சிறுமியை நாமக்கலில் பார்த்தேன்... உடன் இருந்த 3 பேர் - பெண் பரபரப்பு பேட்டி

செஞ்சி சிறுமியை நாமக்கலில் பார்த்தேன்... உடன் இருந்த 3 பேர் - பெண் பரபரப்பு பேட்டி

2

தீபாவளிக்கு பின் ஊர் திரும்ப... சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - தென் மாவட்ட மக்களே நோட் பண்ணுங்க

3

செம மிஸ்ட்ரி த்ரில்லராக உருவாகியுள்ள ‘ஜான் டோ’! எப்போ ரிலீஸ்?

4

தீபாவளி அன்று கனமழை வெளுக்கும்! டெல்டா, தென் மாவட்டங்களுக்கு அலர்ட்.. வெதர்மேன் வார்னிங்

5

83 வயதில் உயிரை மாய்த்துக்கொண்ட எம்.ஜி.ஆர் பட நடிகை! திரையுலகினர் அதிர்ச்சி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.