• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /கிருஷ்ண ஜெயந்தி 2026 ராசிபலன்: செப். 4 முதல் 5 ராசிகளுக்கு ராஜயோகம், நல்ல காலம் ஆரம்பம்

கிருஷ்ண ஜெயந்தி 2026 ராசிபலன்: செப். 4 முதல் 5 ராசிகளுக்கு ராஜயோகம், நல்ல காலம் ஆரம்பம்

Written BySripriya Sambathkumar
Published: Sep 01, 2026, 11:51 IST|Updated: Sep 01, 2026, 11:59 IST
joinshare
Krishna Jayanthi Lucky Zodiac Signs: இன்னும் சில நாட்களில் கிருஷ்ண பகவானின் பிறந்த நாளை நாம் கொண்டாடவுள்ளோம். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்படும்.

Janmashtami Lucky Zodiac Signs: கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் தனித்துவமான அமைப்பால், இந்த ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்நாளில் ரோகிணி நட்சத்திரத்துடன் ஹர்ஷன யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகம் ஆகிய மங்களகரமான சேர்க்கைகள் அமைகின்றன. மேலும், ரிஷப ராசியில் சந்திரன் அமைந்திருப்பது இந்த கிரக அமைப்பின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது. ஜோதிட கணக்கீடுகளின் படி, இந்த மங்களகரமான அமைப்பின் தாக்கம் ஆனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் ஏற்படும்.

Krishna Jayanthi Lucky Zodiac Signs1/8

கிருஷ்ண ஜெயந்தி 2026 ராசிபலன்

ஜோதிட கணக்கீடுகளின் படி, ஜன்மாஷ்டமியில் உருவாகும் மங்களகரமான அமைப்பின் தாக்கம் ஆனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் ஏற்படும்.
Krishna Jayanthi Lucky Zodiac Signs2/8

கிருஷ்ண ஜெயந்தி 2026 ராசிபலன்

இந்த ராசிகளுக்கு ஜன்மாஷ்டமி முதல் சிறப்பான மற்றும் நேர்மறையான பலன்கள் கிடைக்கும். ஐந்து குறிப்பிட்ட ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த ஜன்மாஷ்டமி பண்டிகை செல்வம், வெற்றி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்திற்கான புதிய வாய்ப்புகளைக் கொண்டுவரக்கூடும். செப்டம்பர் 4, ஜன்மாஷ்டமி முதல் அதிகப்படியான நன்மைகளை அடையப்போகும் அந்த 5 ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
Taurus3/8

ரிஷபம்

கிருஷ்ன ஜெயந்தி அன்று உருவாகும் மங்களகரமான கிரக அமைப்புகள் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாகச் சாதகமான பலன்களைத் தரக்கூடும். நீண்ட நாட்களாக முடங்கியிருந்த பணம் திரும்பக் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு தொழில் வளர்ச்சியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். மேலும், வணிகர்களுக்கும் லாபம் ஈட்டும் வாய்ப்புகள் அமையலாம். இவர்களின் நிதி நிலை படிப்படியாக வலுவடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
Cancer4/8

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு, ஜன்மாஷ்டமி முதலான காலம் மன அமைதியையும் குடும்ப மகிழ்ச்சியையும் கொண்டுவரக்கூடும். நீண்ட கால மன அழுத்தம் குறைந்து, மனதிற்கு நிம்மதி கிடைக்க வாய்ப்புள்ளது. பணியில் இருப்பவர்களுக்குச் சாதகமான சூழல் நிலவி, வேலையில் ஸ்திரத்தன்மை ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்பட்டு, வீட்டில் இணக்கமான சூழல் உருவாகலாம். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். அலுவலகத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
Leo5/8

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு, ஜன்மாஷ்டமியின் மங்களகரமான கிரக அமைப்புகள் முடங்கியிருந்த பல விஷயங்களை முன்னெடுத்துச் செல்ல உதவக்கூடும். வெற்றிகள் பல குவியும். சட்டரீதியான சிக்கல்களில் தீர்வு கிடைப்பதற்கும், சாதகமான தீர்ப்பு வருவதற்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக நிறைவடையலாம். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பும் திறமையும் பாராட்டப்படும். இதனால் உங்கள் கௌரவமும் மரியாதையையும் அதிகரிக்கும்.
Libra6/8

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கிருஷ்ண ஜெயந்தி முதல் அனுகூலமான நன்மைகள் ஏற்படும். நிதி விவகாரங்களைப் பொறுத்தவரை, இக்காலம் துலாம் ராசிக்காரர்களுக்குச் சாதகமாக அமையலாம். பண வரவு அதிகமாகும். முதலீடு தொடர்பான முடிவுகள் லாபகரமாக இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், முதலீடு செய்வதற்கு முன் முழுமையான தகவல்களைச் சேகரிப்பது அவசியம். கூட்டு முயற்சிகள் அல்லது கூட்டாண்மை சார்ந்த நடவடிக்கைகள் நல்ல பலன்களைத் தரக்கூடும். மேலும், உங்கள் வாழ்க்கைத் துணையுடனான பரஸ்பர புரிதல் மற்றும் ஒருங்கிணைப்பு மேம்படுவதற்கான அறிகுறிகளும் உள்ளன. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
Sagittarius7/8

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு, ஜன்மாஷ்டமி அன்று உருவாகும் சுப கிரக அமைப்புகள் மற்றும் கிரக பெயர்ச்சிகள் நல்ல அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடும். இக்காலத்தில், பணியில் வெற்றி பெறுவதற்கும் புதிய மைல்கற்களை எட்டுவதற்கும் வாய்ப்புகள் உருவாகலாம். எதிர்பாராத பண வரவுக்கும் வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக, நிதி நிலை வலுவடைவதுடன், நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடந்த பல பணிகள் மீண்டும் வேகம் பெறக்கூடும்.
Disclaimer8/8

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

2

IPL 2027 Auction: பென் ஸ்டோக்ஸுக்கு அனுமதி.. ஹாரி புரூக்கிற்கு மட்டும் ஏன் தடை? பிசிசிஐ சொல்வது என்ன?

3

Explained : வாக்காளர்களின் தேவையை எளிமையாக்கிய 18 வயது ஹேக்கர்! SIR லிஸ்டை சரிபார்ப்பது ஈசி..

4

பஞ்சாபை குறிவைக்கும் பாஜக... என்ன செய்யப்போகுது காங்கிரஸ்? - நிலவரம் இதோ

5

Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.