• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /கிருஷ்ண ஜெயந்தி 2026: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

கிருஷ்ண ஜெயந்தி 2026: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

Written ByR Balaji
Published: Sep 03, 2026, 21:34 IST|Updated: Sep 03, 2026, 21:40 IST
joinshare

கிருஷ்ண ஜெயந்தியான செப்டம்பர் 4 ஆம் தேதியன்று பல்வேறு கிரகங்கள் தங்களின் நிலையை மாற்றி அமைக்கிறது. இந்த மாற்றம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான பலன்களை தர உள்ளது.  
 

Krishna Jeyanthi Rasi Palan1/5

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி நாளை செப்டம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜோதிட ரீதியாக பார்க்கும்போது, இந்த நாளில் உருவாகும் கிரக நிலைகள் மிகவும் சாதகமானதாக கருதப்படுகின்றன. குறிப்பாக குரு பகவான் உச்சம் பெறும் கடக ராசியிலும், சந்திரன் உச்சம் பெறும் ரிஷப ராசியிலும் சஞ்சரிக்கின்றனர்.
Krishna Jeyanthi Rasi Palan2/5

கிருஷ்ண ஜெயந்தி

அதேபோல், சூரியன் தனது சொந்த வீடான சிம்மத்தில் இருப்பதுடன், அசுர குருவான சுக்கிரனும் தனது சொந்த ராசியான துலாமில் அமர்ந்திருக்கிறார். இந்த கிரகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும், குறிப்பிட்ட சில ராசியினருக்கு தொழில், பணவரவு மற்றும் குடும்ப வாழ்க்கையில் கூடுதல் சாதகமான சூழல் உருவாக்கும்.
Krishna Jeyanthi Rasi Palan3/5

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த கிருஷ்ண ஜெயந்தி பல வகைகளில் நன்மைகளை கொண்டு வரக்கூடும். குறிப்பாக தன்னம்பிக்கை அதிகரித்து, முக்கிய முடிவுகளை துணிச்சலுடன் எடுக்கும் சூழல் உருவாகும். பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் காண வாய்ப்புள்ளது. கூடுதல் வருமானத்திற்கான வழிகள் பிறக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. மேலும், குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து, மகிழ்ச்சியான சூழல் உருவாகும் வாய்ப்புள்ளது.
Krishna Jeyanthi Rasi Palan4/5

கடகம்

கடக ராசியினருக்கு கிருஷ்ண ஜெயந்தி மிகவும் சாதகமான நாளாக அமையலாம். குறிப்பாக வேலை மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பணிகளை முடிப்பதற்கான சூழல் உருவாகும். பொருளாதார நிலையிலும் நல்ல மாற்றம் ஏற்படலாம். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளுடன், கிடைக்கும் பணத்தைச் சேமிக்கும் திறனும் அதிகரிக்கும். இதுவரை சந்தித்து வந்த சில நிதி சார்ந்த சிரமங்களுக்கு படிப்படியாக தீர்வு காணும் வாய்ப்பும் உள்ளது.
Krishna Jeyanthi Rasi Palan5/5

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கும் இந்த கிருஷ்ண ஜெயந்தி மங்களகரமான பலன்களை வழங்கக்கூடியதாக இருக்கும். குறிப்பாக தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும். நீண்ட காலமாக மேற்கொண்ட உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும் காலமாக இது அமையக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படலாம். காதல் மற்றும் திருமண உறவில் நெருக்கமும் புரிதலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கலாம். மேலும், எதிர்பாராத பல்வேறு வழிகளில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் வாய்ப்பும் உள்ளது.
TAGS:
Rasipalan

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

2

IPL 2027 Auction: பென் ஸ்டோக்ஸுக்கு அனுமதி.. ஹாரி புரூக்கிற்கு மட்டும் ஏன் தடை? பிசிசிஐ சொல்வது என்ன?

3

Explained : வாக்காளர்களின் தேவையை எளிமையாக்கிய 18 வயது ஹேக்கர்! SIR லிஸ்டை சரிபார்ப்பது ஈசி..

4

பஞ்சாபை குறிவைக்கும் பாஜக... என்ன செய்யப்போகுது காங்கிரஸ்? - நிலவரம் இதோ

5

Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.