• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /கன்னியாகுமரி: டிசம்பர் 3ம் தேதி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

கன்னியாகுமரி: டிசம்பர் 3ம் தேதி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

Written ByUmabarkavi K
Published: Nov 16, 2026, 17:28 IST|Updated: Nov 16, 2026, 17:48 IST
joinshare
Kanyakumari Local Holiday: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி வியாழன் கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதனால், மாணவர்கள் குஷியில் உள்ளனர்.

Kanyakumari Local Holiday:  தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு, டிசம்பர் 3ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Kanyakumari Local Holiday1/5

கன்னியாகுமரிக்கு டிசம்பர் 3 உள்ளூர் விடுமுறை

தமிழகத்தில் நடக்கும் விசேஷ தினங்கள், பண்டிகை நாட்களுக்கு அரசு விடுமுளை அளிப்பது வழக்கம். அதையும் தாண்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த உள்ளூர் விடுமுறை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்ப்டடுள்ளது.
Kanyakumari Local Holiday2/5

கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழா

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2026 (வியாழன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Kanyakumari Local Holiday3/5

டிசம்பர் 12 வேலை நாளாக அறிவித்த மாவட்ட நிர்வாகம்

03.12.2026 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2026 டிசம்பர் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (12.12.2026) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
Kanyakumari Local Holiday4/5

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 03.12.2026 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப், உத்தரவிட்டுள்ளார்.
Kanyakumari Local Holiday5/5

மாணவர்களுக்கு முக்கிய தகவல்

மாணவர்கள் அரையாண்டு தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளனர். டிசம்பர் 3ஆம் தேதி வியாழன்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்தை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
TAGS:
Education

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

2

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

3

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

4

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

5

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.