• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /அடுக்குமாடியில் குடியிருப்போருக்கு... மதுரை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

அடுக்குமாடியில் குடியிருப்போருக்கு... மதுரை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

Written BySudharsan G
Published: Oct 09, 2026, 08:17 PM IST|Updated: Oct 09, 2026, 08:20 PM IST
joinshare
டெங்கு காய்ச்சல் பரவலின் தடுக்கும் வகையில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு மதுரை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

டெங்கு காய்ச்சல் பரவலுக்கு காரணமாக இருக்கும் கொசுக்கள் எங்கெல்லாம் உற்பத்தியாகும்? அதை அடையாளம் காண்பது எப்படி? அதை தடுப்பது எப்படி? உள்ளிட்ட அறிவுரைகளை மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Dengue Prevention1/5

2026இல் டெங்குவின் பாதிப்பு

தமிழ்நாட்டில் நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு சுமார் 21,655 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேற்றைய தினம் (அக்.8) சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.
Dengue Prevention2/5

மதுரை மாநகராட்சியின் பரப்புரை

அப்படியிருக்க, டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மதுரை மாநகராட்சி 'டெங்குவை ஒழிப்போம்' என்ற பரப்புரையை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
Dengue Prevention3/5

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர் கவனத்திற்கு

அந்த வகையில், மதுரையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு மதுரை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக சிறிதளவு தேங்கிய தண்ணீரே கொசு உற்பத்திக்கு போதுமானது என்பதால் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் கொசு உற்பத்தியாகும் இடங்களையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
Dengue Prevention4/5

எங்கெல்லாம் கொசுக்கள் உற்பத்தியாகும்?

மாடித்தோட்டப் பானைகள் மற்றும் அதன் கீழ் உள்ள தட்டுகள், பக்கெட்டுகள் மற்றும் பயன்படுத்தாத கொள்கலன்கள், பழைய பொருட்கள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் கப்புகள், பாட்டில்கள் மற்றும் கழிவுப் பொருட்கள், மேல்நிலை மற்றும் நிலத்தடி நீர்த்தொட்டிகள், பிரிட்ஜின் பின்புறம் உள்ள தண்ணீர் தட்டு, மொட்டிமாடி மற்றும் சன்ஷேடு பகுதிகளில் தேங்கும் மழைநீர், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் தேங்கும் நீர், வடிகால் மற்றும் நீர் கசியும் பகுதிகள் ஆகியவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகலாம் என எச்சரித்துள்ளது.
Dengue Prevention5/5

டெங்கு பரவலை தடுப்பது எப்படி?

மேலும், வாரத்திற்கு ஒருமுறை Dry Day கடைப்பிடிக்கவும், தேங்கியுள்ள நீரை அகற்றவும் மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நீர் பிடிக்கும் பாத்திரஙகளைக் காலி செய்து தேய்த்துச் சுத்தம் செய்யவும்; தண்ணீர் தொட்டிகளை எப்போதும் பாதுகாப்பாக மூடி வைக்கவும் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் காய்ச்சால் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு சுகாதார நிலையத்தை அணுகவும்.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

2

கார் புதுசா வாங்கப்போறீங்களா? என்னென்ன மாடல்கள், என்னென்ன விலை? விவரம் இங்கே

3

2014இல் பும்ராவை ஆர்சிபி அணி தவறவிட்ட கதை... பார்த்தீவ் பட்டேல் சொன்னது!

4

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ஊதியம், நிலுவைத் தொகை, ஓய்வு வயது குறித்த முழு விவரம்!

5

மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தல்: பாஜகவின் சாதனை வெற்றி - முடிவுகள் இதோ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.