Madurai School Holiday: நாளை (செப்டம்பர் 17) முதல் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேக விழாவையொட்டி, நாளை அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Madurai School Holiday: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை (செப்.17) வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
1/5
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நாளை (செப்.17) மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கிட்டதட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனால், லட்சக்கணக்கான பக்தர்கள் அன்றைய தினம் மதுரைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2/5
மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
தற்போது, செப்டம்பர் 16ஆம் தேதி, 17ஆம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த நாட்களில் நடைபெற இருந்த தேர்வுகளை மாற்றி அமைக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெற இருந்த காலாண்டு தேர்வு, செப்டம்பர் 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
3/5
மதுரைக்கு செப்.17,18ஆம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை
இந்த நிலையில், பக்தர்கள் வசதி மற்றும் பாதுகாப்பை வசதியை கருத்தில் கொண்டு, நாளை (செப்.17), நாளை மறுநாள் (செப்.18) மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை (செப்.17), நாளை மறுநாள் (செப்.18) மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
4/5
பள்ளிகளுக்கு அக்டோபர் மாதம் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிப்பு.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், அக்டோபர் மாதத்தில் இரு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், செப்டம்பர் 24ஆம் தேத பணிநாளாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விடுமுறை காரணமாக, ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளில் செப்டம்பர் 17ஆம் தேதியில் நடைபெற இருந்த காலாண்டு மற்றும் பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
5/5
காலாண்டு தேர்வு ஒத்திவைப்பு
அதேபோல, செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் செப்டம்பர் 24,25ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தயாளன் உத்தரவிட்டுள்ளார்