மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் அதேவேளையில் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கடைசியாக 2009ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பின் 17 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெறுகிறது. தற்போது யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 17ஆம் தேதி அன்று காலை 7.40 மணிமுதல் காலை 8.10 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறும்.
1/5
17 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு
புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு சுமார் 17 ஆண்டுகளுக்கு பின் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. குடமுழுக்கை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக ஏராளமான வசதிகள் கோவிலிலும், நகரிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
2/5
குடமுழுக்கை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்
மதுரை மாநகரின் பல்வேறு இடங்களில் தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய வாகன பார்க்கிங் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ன. கோவிலிலும் செப். 17 முதல் செப். 20 வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே குடமுழுக்கை முன்னிட்டு மதுரைக்கு சிறப்பு ரயில்களையும் இயக்க உள்ளது. சிறப்பு பேருந்துகளும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3/5
குடமுழுக்கை முன்னிட்டு 3 ஐஏஎஸ் நியமனம்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு பணிகளை கண்காணிக்க மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை நியமினம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கே. வீரராகவ ராவ் ஐஏஎஸ், பி. மதுசுதன் ரெட்டி ஐஏஎஸ், சி. பழனி ஐஏஎஸ் ஆகியோரை தமிழ்நாடு அரசு நாளை (செப். 15) முதல் செப். 17ஆம் தேதிவரை சிறப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
4/5
மீனாட்சியம்மன் குடமுழுக்கு உள்ளூர் விடுமுறை
குடமுழுக்கை காண உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் மதுரை மாநகருக்கு வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்கள், விஐபிகள் என பல தரப்பினர் மதுரைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் வரும் செப்.17ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் மதுரையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது.
5/5
மாட்டுத்தாவணி காய்கறி மொத்த விற்பனை சந்தைக்கும் விடுமுறை
அதேபோல், மதுரை மாட்டுத்தாவணியில் இயங்கி வரும் காய்கறி மொத்த மார்கெட்டுக்கும் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு நடைபெறும் அன்று நள்ளிரவு முதலே அதிகளவில் வாகனங்கள் மதுரை நகருக்குள் வரும் என்பதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவும் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், குடமுழுக்கு தினத்தன்று காய்கறி மொத்த சந்தைக்கு விடுமுறை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.