• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /மதுரை மக்களே... இந்த 4 நாட்களில்... மீனாட்சியம்மன் கோவில் கட்டண தரிசனம் ரத்து

மதுரை மக்களே... இந்த 4 நாட்களில்... மீனாட்சியம்மன் கோவில் கட்டண தரிசனம் ரத்து

Written BySudharsan G
Published: Sep 12, 2026, 01:48 PM IST|Updated: Sep 12, 2026, 01:57 PM IST
joinshare
மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக். 2ஆம் தேதிவரை மண்டல பூஜைகள் நடைபெற இருக்கின்றன. இதையொட்டி கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Madurai Temple Kudamuzhukku1/5

17 ஆண்டுகளுக்கு பிறகு மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு

வழக்கமாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறும். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கடைசியாக 2009ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து 2018ஆம் ஆண்டில் வீர வசந்தராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மண்டபம் சீரமைப்பு பணிகள் காரணமாக குடமுழுக்கு தள்ளிப்போனது.
Madurai Temple Kudamuzhukku2/5

மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு எப்போது...?

இந்நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு வரும் செப்டம்பர் 17ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. இதையொட்டி, தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.நேற்று (செப். 11) மாலை முதல் யாகசாலை பூஜை நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 17ஆம் தேதிவரை மொத்தம் 12 கால யாகசாலை பூஜை நடைபெற இருக்கிறது.
Madurai Temple Kudamuzhukku3/5

மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு நேர விவரம்

வரும் செப்டம்பர் 17ஆம் தேதி காலை 7.40 முதல் காலை 8.10 மணிவரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க விமானங்களுக்கும், ராஜ கோபுரங்களுக்கும், மீனாட்சியம்மன் மூலஸ்தானத்திற்கும், சுந்தரஸ்வரர் மூலஸ்தானத்திற்கும் குடமுழுக்கு நடைபெறும். வரும் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக். 2ஆம் தேதிவரை மண்டல பூஜைகள் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Madurai Temple Kudamuzhukku4/5

மீனாட்சியம்மன் கோவில் கட்டண தரிசனம் ரத்து

இந்நிலையில், குடமுழுக்கை ஒட்டி வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் செப்டம்பர் 20ஆம் தேதிவரை அதாவது நான்கு நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைத்து வரிசைகள் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டப்டுள்ளது.
Madurai Temple Kudamuzhukku5/5

மீனாட்சியம்மன் கோவில் கட்டண தரிசனம் எவ்வளவு?

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் விரைவாக சாமி தரிசனம் செய்யும் வகையில் ரூ.50 மற்றும் ரூ.100 மதிப்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குடமுழுக்கை முன்னிட்டு இந்த கட்டண தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பொது வரிசையில் அனைத்து பக்தர்களும் இலவசமாக சாமி தரிசனம் செய்யலாம்.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் உரிமையாளரே பொறுப்பு: தமிழக அரசின் புதிய சட்டம்!

கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் உரிமையாளரே பொறுப்பு: தமிழக அரசின் புதிய சட்டம்!

2

சிறு வியாபாரிகளுக்கு குட் நியூஸ்: தமிழ்நாடு அரசின் Self-Declaration புதிய விதி!

3

2027 Gold Prediction: 10 கிராம் தங்கம் விலை இவ்வளவா? இரண்டே மாதங்களில் காத்திருக்கும் ஷாக்!

4

பயிர்க்கடன் யாருக்கெல்லாம் கடன் முழுசா தள்ளுபடியாகும்? தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு Explained

5

உள்கட்டமைப்பு பணிகளுக்கு புதிய நிறுவனம்! தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.