• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /மதுரையில் மக்கள் கவனத்திற்கு... அக்டோபர் 10இல் பொதுமக்கள் குறைதீர் முகாம்...

மதுரையில் மக்கள் கவனத்திற்கு... அக்டோபர் 10இல் பொதுமக்கள் குறைதீர் முகாம்...

Written BySudharsan G
Published: Oct 08, 2026, 11:06 PM IST|Updated: Oct 08, 2026, 11:13 PM IST
joinshare
ரேசன் கடைகள் மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெற தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாதமும் குறைதீர் முகாம்களை நடத்தி வரும் நிலையில், நடப்பு அக்டோபர் மாதத்திற்கான முகாம் குறித்தும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இந்த குறைதீர் முகாம்கள் நடைபெற இருக்கும் நிலையில், மதுரை மாவட்டத்திலும் நடைபெற இருக்கிறது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

Madurai News1/5

எத்தனை மணிவரை முகாம் இருக்கும்?

பொதுமக்கள் தங்களது மனுக்களை நேரடியாக முகாம் அலுவலரிடம் வழங்கி தீர்வுகளை பெற்றுக்கொள்ளலாம். வரும் அக்டோபர் 10ஆம் தேதி அன்று காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை இந்த கூட்டம் நடைபெறும்.
Madurai News2/5

பொதுமக்கள் புகார்களையும் தெரிவிக்கலாம்

பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருக்கும்பட்சத்தில், அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவிக்கலாம். அவர்களின் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Madurai News3/5

என்னென்ன சேவைகள் வழங்கப்படும்?

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் இந்த முகாமில் செய்து கொடுக்கப்டும். அதேபோல், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் வழியாக (OTP) மட்டுமே மேற்கொள்ளப்படும். எனவே, குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் வர வேண்டும்.
Madurai News4/5

மதுரையில் எங்கெல்லாம் முகாம் நடைபெறும்?

அதன்படி, 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் மதுரையிலும் நடைபெற இருக்கிறது. மதுரையில் குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் இந்த குறைதீர் முகாம் நடைபெற இருக்கிறது.
Madurai News5/5

மக்கள் குறைதீர் முகாம்

பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் 2வது சனிக்கிழமை அன்று நடத்தப்படுகிறது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
CM விஜய்க்கு முக்கியமான தேர்தல்: மதுராந்தகம், தாராபுரத்தில் காலை 8 மணிக்கு கவுன்டிங்

CM விஜய்க்கு முக்கியமான தேர்தல்: மதுராந்தகம், தாராபுரத்தில் காலை 8 மணிக்கு கவுன்டிங்

2

இந்தியாவின் பாஸ் அம்பானியா? எலான் மஸ்க் மீண்டும் சீண்டல்... முழு பின்னணி

3

21 மனைவிகளுடன் வாழும் பிச்சைக்காரர்... பெண்களே தேடி வருவார்களாம்!

4

1976 வள்ளுவர் கோட்டம்... 2026 சென்னை மெட்ரோ - மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டிய முக்கிய வரலாறு

5

தமிழக அமைச்சரவையில் பாமக? தவெகவின் அதிரடி நகர்வு.. என்ன செய்யும் விசிக?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.