• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /கடகத்தில் பெயர்ச்சியாகும் செவ்வாய்.. அடுத்த 45 நாட்கள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

கடகத்தில் பெயர்ச்சியாகும் செவ்வாய்.. அடுத்த 45 நாட்கள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

Written ByR Balaji
Published: Oct 01, 2026, 08:23 PM IST|Updated: Oct 01, 2026, 08:26 PM IST
joinshare

கடக ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாக உள்ள நிலையில், 4 ராசிக்காரர்களுக்கு அடுத்த 45 நாட்களில் பணம், தொழில், சொத்து உள்ளிட்ட விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கலாம்.
 

Rasi Palan1/5

கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் செவ்வாய்

ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் ஆற்றல், தைரியம், முயற்சி, நிலம் மற்றும் சகோதரர்களை குறிக்கும் கிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், செவ்வாய் விரைவில் கடக ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளது. இந்த பெயர்ச்சி அடுத்த 45 நாட்களுக்கு சில ராசிகளுக்கு சாதகமான பலன்களை வழங்கும். குறிப்பாக தொழில், வியாபாரம், சொத்து மற்றும் பண விஷயங்களில் 5 ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கலாம்.
Rasi Palan2/5

மேஷம் - வீடு, நிலம் வாங்கும் வாய்ப்பு

செவ்வாய் மேஷ ராசியின் அதிபதி என்பதால், கடகத்தில் ஏற்படும் இந்த பெயர்ச்சி தடைகளை கடக்க உதவும். நீண்ட நாட்களாக வீடு, நிலம் அல்லது வாகனம் வாங்க திட்டமிட்டு வருபவர்களுக்கு அடுத்த 45 நாட்களில் அதற்கான வாய்ப்பு அமையலாம். பணியிடத்திலும் தைரியம் மற்றும் தலைமை பண்பு காரணமாக மேலதிகாரிகளின் பாராட்டை பெறலாம்.
Rasi Palan3/5

கடகம் - பணம், தொழிலில் முன்னேற்றம்

செவ்வாய் பெயர்ச்சி தொடர்பு மற்றும் முயற்சிகளை வலுப்படுத்தும். தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டண்மைகள் மூலம் லாபம் கிடைக்கலாம். சகோதரர்களின் உதவியால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவுக்கு வரலாம். பொருளாதார நிலையும் மேம்பட வாய்ப்புள்ளது.
Rasi Palan4/5

விருச்சிகம் - போட்டி தேர்வில் வெற்றி

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால், கடகத்தில் ஏற்படும் இந்த பெயர்ச்சி அதிர்ஷ்டத்துக்கு சாதகமாக அமையலாம். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கும் உயர்கல்வி படிக்க விரும்புபவர்களுக்கும் இந்த காலகட்டம் சாதகமாக இருக்கலாம். நீண்ட தூர பயணங்கள் பலன் தரும் என்றும், நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் சில அரசு தொடர்பான பணிகள் நிறைவேற வாய்ப்புள்ளது.
Rasi Palan5/5

மீனம் - புதிய வருமான வாய்ப்புகள்

மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மூலம் புதிய வருமான வாய்ப்புகள் உருவாகலாம். குறிப்பாக படைப்பு துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கலாம். பங்குச்சந்தை பூர்வீக சொத்து அல்லது ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைக்கலாம். குடும்பத்தில் குழந்தைகள் தொடர்பாக மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
இனி டோல் கேட்ல நிற்க வேண்டாம்.. பரனூரில் அமலான புதிய வசதி!

இனி டோல் கேட்ல நிற்க வேண்டாம்.. பரனூரில் அமலான புதிய வசதி!

2

‘சிக்மா’ ரிலீஸ்..ஜேசன் சஞ்சய்க்கு ஜோதிகா வாழ்த்து! என்ன கூறியிருக்கிறார்?

3

விஜய் நினைப்பது வேறு, நடப்பது வேறு.. நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

4

Explained : மரண தண்டனை..2 முறை விஷ ஊசி போட்டும் சாகாத பெண்! என்ன காரணம்?

5

ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி விவகாரம்.. திமுக நிர்வாகி கைது!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.