செப்டம்பர் 18ல் நடைபெறும் செவ்வாய் பெயர்ச்சியால் ரிஷபம், துலாம், கும்பம் ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு பணம், வேலை, தொழில் உள்ளிட்ட துறைகளில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட உள்ளது.
1/5
செப்டம்பர் 18ல் செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் கிரகம் தைரியம், ஆற்றல் மறும் வலிமையின் காரணியாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறது. 2026 செப்டம்பர் 18 ஆம் தேதி மாலை 5.:03 மணியளவில் செவ்வாய் கடக ராசிக்குள் நுழைகிறது. நவம்பர் 12 ஆம் தேதி வரை அங்கேயே சஞ்சரிக்கிறது. இந்த பெயர்ச்சி 12 ராசிகளிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு மட்டும் அதிக பலன்களை தர இருக்கிறது.
2/5
ரிஷபம்: பொருளாதாரத்தில் முன்னேற்றம்
செவ்வாய் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். நிதி நிலை மேம்படுவதுடன், நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க வாய்ப்பு கிடைக்கும். வேலைப்பளுவில் பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது புதிய வேலை கிடைக்கலாம். சொத்து, வாகனம் வாங்கவும் சாதகமான நேரமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கலாம்.
3/5
துலாம்: வேலை, தொழிலில் வெற்றி
செவ்வாய் துலாம் ராசிக்காரர்களின் 10 ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறது. இதனால் தொழில் மற்றும் பணியில் முன்னேற்றம் கிடக்கலாம். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைப்பதுடன், பதவி உயர்வுக்கும் வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகள் வெற்றி பெறலாம். வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் மற்றும் பணவரவு கிடைக்க வாய்ப்புள்ளது.
4/5
கும்பம்: வேலை தேடுவோருக்கு நல்ல செய்தி
கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 6 ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறது. இந்த நிலை வேலை மற்றும் தொழிலில் சாதகமான பலன்களை தரும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். வணிகத்தில் லாபம் அதிகரிக்கலாம். பணியிடத்தில் கடின உழைப்புக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
5/5
யாருக்கு பொற்காலம்?
செவ்வாய் பெயர்ச்சியால் ரிஷபம், துலாம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில், பணம் மற்றும் வாழ்க்கை தொடர்பாக சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த முயற்சிகள் வெற்றி பெறவும். புதிய வாய்ப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.