Madurai Thiruparankundram Temple: மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்ப்ட்டுள்ளது. இதனால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Madurai Thiruparankundram Temple: அதாவது, செப்டம்பர் 1 முதல் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
1/5
திருப்பரங்குன்றம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படைவீமாக திருப்பரங்குன்றம் அறியப்படுகிறது. இக்கோயில் மதுரையில் இருந்த 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால், எந்நேரம் பார்த்தாலும் திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
2/5
பக்தர்கள் கூட்டம்
அதே நேரத்தில், விடுமுறை நாட்கள், விசேஷ தினங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்கு ஏற்ப கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கோயில் நிர்வாகம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
3/5
செல்போனுக்கு தடை
அதாவது, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக துணை ஆணையர் ஜி. செல்வி தெரிவித்தார். பக்தர்கள் தங்கள் கைபேசிகளை, கோயிலின் பிரதான நுழைவாயிலில் உள்ள காலணி விற்பனைப் பகுதிக்கு அருகில் வைப்பதற்குத் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4/5
செப்டம்பர் 1 முதல் அமல்
மதுரை திருப்பரங்குன்றம் கோயில் மட்டுமில்லாமல், தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயிலில் செப்டம்பர் 1 முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாக அறநிலையத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
5/5
அறநிலையத்துறை
அந்த விற்பனைப் பகுதியில் ஒரு ஊழியர் பணியில் இருப்பார்; அவர் ஒரு கைபேசிக்கு ரூ.5 கட்டணம் வசூலித்து, அதற்கான ரசீதையும் வழங்குவார் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் கேமராக்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பார்கள் என்றும் செப்டம்பர் 1 முதல் விதிகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.