காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகருமான தோனி சென்னை வந்துள்ளார். அவரது புகைப்படங்களை இங்கு காணலாம்.
காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு நிகழ்வு இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. நேற்றைப் போலவே சென்னையில் கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா சொகுசு ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.
1/5
காவ்யா - அனிருத் ரிசப்ஷன்
காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா சொகுசு ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கேரள முதலமைச்சர் வி.டி. சதீஷன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், உறவினர்கள், பிரபலங்கள் நேற்றைய (நவ. 21) வரவேற்பு நிகழ்வில் பங்கெடுத்தனர்.
2/5
இன்றும் காவ்யா - அனிருத் ரிசப்ஷன்
இன்றும் அனிருத் - காவ்யா திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற இருக்கிறது. இதில் திரைப்பட நட்சத்திரங்கள், நண்பர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கெடுக்க உள்ளனர். இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா, தெலுங்கு திரைப்பட நட்சத்திரங்களான டகுபதி வெங்கடேஷ், ராணா டகுபதி, ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா, வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் ஷகிப் அல் ஹாசன் உள்ளிட்டோர் சென்னைக்கு வருகை தந்தனர். இவர்களின் சென்னை விமான நிலையம் வந்த வீடியோக்களை இணையத்தில் காண முடிந்தது.
3/5
நட்சத்திரங்கள் பங்கேற்பு
இவர்கள் மட்டுமின்றி தென்னிந்திய திரை உலகின் முக்கிய நட்சத்திரங்கள், நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் இன்றைய நிகழ்வில் பங்கெடுப்பார்கள் என தெரிகிறது. நடிகர் அஜித்குமார், எஸ்ஆர்ஹெச் பயிற்சியாளர் முத்தையா முரளிதரன், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் ஆகியோர் இன்றைய நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். நடிகர் சிலம்பரசன், இயக்குநர் நெல்சன் ஆகியோர் இன்றைய விழாவில் பங்கேற்றுள்ளனர்.
4/5
சென்னையில் தோனி, சாக்ஷி
இந்தச் சூழலில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகருமான எம்எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் அனிருத் - காவ்யா திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள சென்னை வந்தனர். அவர்கள் சென்னை வந்த வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. அனிருத்தின் பல பாடல்கள், சேப்பாக்கத்தில் தோனி களமிறங்கிய போது என்ட்ரி பாடலாக ஒலிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே உடன் அனிருத் நெருங்கிய உறவிலும் இருந்தார். அதேநேரத்தில், அவரின் மனைவி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
5/5
ஓய்வுக்கு பின் முதல்முறையாக சென்னையில் தோனி
கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஐபிஎல் தொடரில் இருந்து தோனி ஓய்வை அறிவித்திருந்தார். தொடர்ந்து சிஎஸ்கே அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்புக்கு பின்னர் தோனி முதல்முறையாக சென்னை வந்துள்ளார். அடுத்த மாதம் டிசம்பர் 16ஆம் தேதி கோவாவில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுகிறது. இதன் பின்னர், இன்றைய அனிருத் - காவ்யா திருமண வரவேற்பு நிகழ்வின் புகைப்படங்கள் வெளியாகக் கூடும்.