• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /ஹர்திக் பாண்டியா Trade உறுதி... MI போட்ட பதிவில் இதை நோட் பண்ணீங்களா..!

ஹர்திக் பாண்டியா Trade உறுதி... MI போட்ட பதிவில் இதை நோட் பண்ணீங்களா..!

Written BySudharsan G
Published: Nov 01, 2026, 12:20 AM IST|Updated: Nov 01, 2026, 12:23 AM IST
joinshare
ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் செய்யப்பட உள்ளதாக பல மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி கழட்டிவிட உள்ளது என்பது அந்த அணி இன்று போட்ட பதிவில் ஏறத்தாழ தெரியவந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணியாகும். சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் ஒரு கோப்பையை வென்றிருக்கிறது. அப்படியிருக்க, கடைசி 6 சீசன்களாக மும்பை அணி இறுதிப்போட்டிக்கு கூட வரவில்லை. ஹர்திக் பாண்டியா கடந்த 3 சீசன்களாக கேப்டனாக இருந்தும் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.
 

Mumbai Indians1/5

ஹர்திக் பாண்டியா டிரேட்

ஐபிஎல் 2026 தொடர் நிறைவடைந்த உடனேயே ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் செய்யும் என தகவல்கள் கசிந்தன. ஆனால் இன்று வரை அது பேச்சாகவே உள்ளது, இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஹர்திக் எந்த அணிக்கு போகிறார் என்பதல்ல, ஹர்திக் மும்பை அணியில் இருந்து விடுக்கப்படுவாரா...? இல்லையா...? என்பதே இன்னும் சரியாக தெரியவில்லை எனலாம்.
Mumbai Indians2/5

பேச்சுவார்த்தை நடத்தும் அணிகள்

இருப்பினும் ஹர்திக் பாண்டியா டிரேட் பேச்சுகள் தொடர்ந்து கசிந்த வண்ணம் உள்ளன. கேகேஆர், ராஜஸ்தான், சிஎஸ்கே அணிகள் ஹர்திக் பாண்டியாவை பெற பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்தன. இந்தியன் விக்கெட் கீப்பர், வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் அல்லது இந்திய ஸ்பின்னரை குறிவைத்து மும்பை இந்தியன்ஸ் அணியும் டிரேட் பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக பேசப்படுகிறது.
Hardik Pandya3/5

மும்பை குறிவைக்கும் வீரர்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவி பிஷ்னோய்; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி; சிஎஸ்கேவில் இருந்து தூபே, ஆயுஷ் மாத்ரே, எல்லிஸ்; என பல பெயர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் டிரேடில் மும்பை வாங்க நினைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவும் உறுதியாகவில்லை.
Hardik Pandya4/5

மும்பை இந்தியன்ஸின் சமூக வலைதளப் பதிவு

இந்தச் சூழலில், மும்பை இந்தியன்ஸ் நட்சத்திர வீரர்களின் அக்டோபர் மாத புகைப்படங்களை அந்த அணி அதன் சமூக வலைதளப் பக்கங்ளில் இன்று (அக். 31) பதிவிட்டிருந்தது. இரவு 8 மணிக்கு போட்ட அந்த பதிவில், மும்பை இந்தியன்ஸ் ஆடவர் அணியின் ரோஹித் சர்மா, திலக் வர்மா, ஜஸ்பிரித் பும்ரா, நமன் திர், சூர்யகுமார் யாதவ், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், மயங்க் மார்க்கண்டே, ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், அஸ்வானி குமார் ஆகியோரின் அக்டோபர் மாத புகைப்படங்களை வரிசையாக பதிவிட்டிருந்தார்கள்.
Hardik Pandya5/5

ஹர்திக் பாண்டியாவின் புகைப்படம் இல்லை

ஆனால், அதில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் புகைப்படம் இடம்பெறவில்லை. மும்பை இந்தியன்ஸ் ஆடவர் அணி வீரர்கள் மட்டுமின்றி, மகளிர் அணியின் வீராங்கனைகள் சிலரின் புகைப்படங்களும் கூட இடம்பெற்றிருந்தது. மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கௌரின் புகைப்படமும் அதில் இருந்தது. ஆனால் ஹர்திக் பாண்டியாவின் புகைப்படம் ஏதும் அதில் இல்லை. அதுவும் அக்டோபர் மாதம்தான் ஹர்திக் பாண்டியாவின் பிறந்தநாள் மாதமாகும். அப்படியிருக்க, மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் செய்ய திட்டமிடுவதால் கூட அவரின் புகைப்படம் இடம்பெறாமல் இருக்கலாம் என ரசிகர்கள் பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
TAGS:
IPL

Trending

  • News
  • Photos
  • Videos
இந்து மத விஷயத்தில் மட்டும்... கடும் நடவடிக்கைகளை எடுத்த அரசு... நீதிபதி கருத்து

இந்து மத விஷயத்தில் மட்டும்... கடும் நடவடிக்கைகளை எடுத்த அரசு... நீதிபதி கருத்து

2

ஆட்சியை நடத்துவது 3 டம்மி முதல்வர்கள் தான்... CM விஜய்க்கு ஒன்றும் தெரியாது - இபிஎஸ் பேச்சு

3

ஆஸ்திரேலியா தோல்வி; இந்தியாவுக்கு பெரிய பூஸ்ட்... WTC பைனலுக்கு போக வாய்ப்பிருக்கா? Explained

4

'2024 மக்களவை தேர்தல் சட்டவிரோதம்... தேர்தல் ஆணையமே சொல்கிறது' - ராகுல் காந்தி கூறுவது என்ன?

5

3 தமிழக வீரர்களுக்கு CSK குறி.. யாரெல்லாம் தெரியுமா? இவர் வந்தா நல்லா இருக்கும்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.