தென்னாப்பிரிக்கா அணி தான் ஏன் உலக டெஸ்ட் சாம்பியன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ஆஸ்திரேலியாவை 1-2 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது.
டர்பனில் நடந்த முதல் டெஸ்டில் தோல்வியடைந்திருந்தாலும், கெபெர்ஹாவில் நடந்த 2வது டெஸ்டில் வென்று தென்னாப்பிரிக்கா அணி, ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்தது. இந்நிலையில், கேப் டவுனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியை 176 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை தட்டிச் சென்றிருக்கிறது, தென்னாப்பிரிக்க அணி.
இதனால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்கா அணி 3வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. அதேநேரத்தில் தொடரை இழந்த ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் இருந்து 3வது இடத்திற்கு சரிந்துள்ளது. இதனால், 2வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறியது.
புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளே, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முடியும். அடுத்தாண்டு ஜூன் 9ஆம் தேதி முதல் ஜூன் 13ஆம் தேதிவரை இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் WTC இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.
New Zealand and South Africa become the top two sides in the #WTC27 Standings following the Cape Town Test 👊 Check out the movements on the ICC World Test Championship Standings via the predictor 👉 https://t.co/T8iyDajWzL https://t.co/gTDnH422ru
— ICC (@ICC) October 31, 2026
எனவே, ஒவ்வொரு அணிக்கும் இன்னும் மிக சில தொடர்கள் மட்டுமே நடப்பு ஐசிசி WTC சுழற்சியில் பாக்கி இருக்கிறது. எனவே, டாப் 2 இடத்திற்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இதுநாள் வரை டாப்பில் இருந்த ஆஸ்திரேலியா 3வது இடத்திற்கு சரிந்திருப்பதன் மூலம் இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான கணக்கீடுகள் என்ன சொல்கின்றன? என்பதை இங்கு காணலாம்.
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததும், அக்டோபர் 31ஆம் தேதி நிலவரப்படி ஐசிசி WTC புள்ளிப்பட்டியல் நிலவரம் இதோ
| இடம் | அணி | போட்டிகள் | வெற்றி | தோல்வி | டிரா | புள்ளிகள் சதவீதம் |
| 1 | நியூசிலாந்து | 6 | 4 | 1 | 1 | 72.22% |
| 2 | தென்னாப்பிரிக்கா | 7 | 5 | 2 | 0 | 71.43% |
| 3 | ஆஸ்திரேலியா | 13 | 9 | 4 | 0 | 69.23% |
| 4 | இந்தியா | 11 | 5 | 4 | 2 | 51.52% |
| 5 | வங்கதேசம் | 7 | 3 | 3 | 1 | 47.62% |
| 6 | இங்கிலாந்து | 16 | 7 | 8 | 1 | 38.54% |
| 7 | இலங்கை | 6 | 1 | 2 | 3 | 33.33% |
| 8 | மேற்கு இந்திய தீவுகள் | 13 | 3 | 8 | 2 | 26.92% |
| 9 | பாகிஸ்தான் | 9 | 2 | 7 | 0 | 54.63% |
இந்த பட்டியலில் இந்தியா, ஆஸ்திரேலியா அணியை விட 17.71 புள்ளிகள் சதவீதத்தில் பின்தங்கி உள்ளது. இருப்பினும் இந்தியாவுக்கு 7 டெஸ்ட் போட்டிகளுக்கும், ஆஸ்திரேலியாவுக்கு 9 டெஸ்ட் போட்டிகளும் பாக்கி இருப்பதால் இரு அணிகளுக்கும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வாய்ப்புகள் உள்ளன. அவற்றை அலசலாம்.
நியூசிலாந்து: இந்தியாவுக்கு எதிராக உள்நாட்டில் (Home) 2 டெஸ்ட் போட்டிகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெளிநாட்டில் (Away) 4 டெஸ்ட் போட்டிகள் உள்ளன.
தென்னாப்பிரிக்கா: வங்கதேசத்திற்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள், இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த இரண்டு டெஸ்ட் தொடர்களும் தென்னாப்பிரிக்காவிலேயே நடைபெறுகிறது என்பதால் தென்னாப்பிரிக்கா கூடுதல் சாதகம்.
இந்திய அணியின் இறுதிப்போட்டி கனவைத் தீர்மானிப்பதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் மிக முக்கியப் பங்கை வகிக்க வாய்ப்புள்ளது.
அதற்கு முன் நியூசிலாந்து தொடரை வெல்ல வேண்டும் என்றாலும், உள்நாட்டில் 5 போட்டிகளையும் வென்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு பிரகாசமாகும். இதனால், ஆஸ்திரேலியாவை இறுதிப்போட்டி ரேஸில் இருந்து நீக்கிவிடலாம். ஒருவேளை நியூசிலாந்து - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் டிராவானாலும் இந்தியாவுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
ஆஸ்திரேலியாவின் தோல்வி இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஆனால், அது மட்டும் இந்தியாவைப் பைனலுக்கு அழைத்துச் செல்லாது. இந்தியா தனது மீதமுள்ள 7 போட்டிகளில் அதிகபட்ச வெற்றிகளைப் பெறுவதும், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளின் முடிவுகளும் முக்கியம்.