புதன் - வருணன் இணைவதால் நவபஞ்ச ராஜயோகம் உருவாகும். இந்த ராஜயோகத்தால் மூன்று ராசிக்காரர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும். அவர்கள் யார் யார்...? அவர்களுக்கான பலன்கள் என்ன...? என்பதை இங்கு விரிவாக காணலாம்.
வேத ஜோதிடத்தின்படி, நவ கிரகங்கள் ராசிகளுக்கு இடையே பெயர்ச்சி அடையும், ஒவ்வொரு கிரகங்களும் அதற்கேற்ற காலத்தில் பெயர்ச்சி அடையும். அந்த வகையில், புதன் கிரகம் விருச்சிக ராசிக்கும், வருணன் மீன ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். இதனால் 120 டிகிரி கோணத்தில் புதன் - வருணன் இணையும், நவபஞ்ச ராஜயோகம் உருவாகும்.
1/6
நவபஞ்ச ராஜயோகம்
AI Generated Image : ChatGPT
2/6
பயனடையும் 3 ராசிகள்
திரிக் பஞ்சாங்கத்தின்படி, வரும் டிசம்பர் 7ஆம் தேதி அன்று இந்த நவபஞ்சம் ராஜயோகம் உருவாகிறது. இந்த காலகட்டத்தில் புதன் விருச்சிகத்திலும் (6வது ராசி), வருணன் மீனத்திலும் பெயர்ச்சி அடைகிறது. இதனால், பயனடையும் 3 ராசிகளை இங்கு காணலாம்.
3/6
மேஷ ராசிக்காரர்கள் கவனத்திற்கு...
புதன் வருணன் திரிகோண அமைப்பு மேஷ ராசியினருக்கு சிறப்பான பலன்களை தரும். முடிவெடுக்கும் திறன், கற்பனை மேம்படும், நீண்டநாள் திட்டங்களைத் தொடங்க இது ஏற்ற காலமாக இருக்கும்.
4/6
சிம்ம ராசிக்காரர்கள் கவனத்திற்கு...
பணியாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். மேலதிகாரிகளுடனான உறவு மேம்படும். தொழிலதிபர்களுக்கு புதிய தொடர்புகள், தொழில் விரிவாக்க வாய்ப்புகள் கிடைக்கும். நிதிநிலை சாதமாக இருந்தாலும் முதலீடுகளில் விவேகத்துடன் செயல்படுவது நல்லது.
5/6
தனுசு ராசிக்காரர்கள் கவனத்திற்கு...
புதன் - வருணன் கிரகங்களின் நிலையைப் பொறுத்து பல்வேறு நன்மைகள் கிடைக்கும். படைப்பாற்றல் அதிகரிக்கும், கல்வி, எழுத்து, ஊடகம், கலைத்துறையில் சிறப்பான பலன்கள் உண்டாகும். பணியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
6/6
பொறுப்பு துறப்பு
இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.