IPL 2027 Mini Auction: ஐபிஎல் 2027 மினி ஏலத்தை முன்னிட்டு அதிகம் கவனிக்கப்படும் நான்கு இந்திய Uncapped ஆல்-ரவுண்டர்கள் குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
Notable Indian Uncapped Allrounders: Uncapped வீரர்கள் என்பது இந்திய அணிக்காக இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள் ஆவர். அதிலும் குறிப்பாக, சர்வதேச போட்டிகளில் பிளேயிங் லெவனில் இடம்பெற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்திருந்தால், ஐபிஎல் விதிப்படி அவர்களும் Uncapped வீரர்கள்தான். தற்போது, இஷாந்த் சர்மா Uncapped வீரர் ஆவார். கடைசியாக 2021ஆம் ஆண்டில் அவர் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
1/5
பிரசாந்த் வீர்
உத்தர பிரதேச வீரரான பிரசாந்த் வீர் (21) இடது கை பேட்டர் மற்றும் இடது கை ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர் ஆவார். இவரை சிஎஸ்கே அணி கடந்த மினி ஏலத்தில் ரூ.14.20 கோடிக்கு எடுத்தது, ஆனால் இவரை தற்போது விடுவித்துவிட்டது. நடப்பு சையத் முஷ்டாக் அலி டிராபி கோப்பை தொடரில் பிரசாந்த் வீர் கடந்த 7 இன்னிங்ஸில் பேட்டிங்கில் 75 ரன்களையும், 6 விக்கெட்டுகளையும் மட்டுமே வீழ்த்தி உள்ளார். அதேநேரத்தில் உத்தர பிரதேசம் அணி தொடரில் இருந்து வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது. பிரசாந்த் வீர் பெரியளவில் சோபிக்காவிட்டாலும் இவருக்கு பலரும் ஏலம் கேட்பார்கள். சிஎஸ்கே கூட ரூ.5 கோடிக்குள் இவரை மீண்டும் எடுக்க நினைக்கும்.
2/5
விகல்ப் திவாரி
சத்தீஸ்கர் அணி வீரரான விகல்ப் திவாரி இடது கை பேட்டர் மற்றும் இடது கை ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர் ஆவார். நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அவர் 6 இன்னிங்ஸில் 237 ரன்களை அடித்துள்ளார். 2 இன்னிங்ஸில் பந்துவீசி விக்கெட் ஏதும் அவர் வீசவில்லை. 17 வயதான இவர், பந்துவீச்சில் இன்னும் நிறையே முன்னேற்றம் காண வேண்டும். ஆனால் பேட்டிங் மிகச் சிறப்பானதாக வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது. எனவே இவரை பந்துவீசக் கூடிய பேட்டராக பார்க்கலாம். நம்பர் 3 வீரராக இவர் களமிறங்கி விளையாடுகிறார். இவரது சத்தீஸ்கர் அணியும் தொடரில் இருந்து வெளியேறிவிட்டது.
3/5
மன்வந்த் குமார்
கர்நாடக வீரரான மன்வந்த் குமார் (22) வலது கை பேட்டர் மற்றும் இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஆவார். நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் 6 இன்னிங்ஸில் 91 ரன்களையும், 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார். கர்நாடகா அணியும் தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. இவரது இடது கை வேகப்பந்துவீச்சு பல அணிகளை கவனிக்க வைத்துள்ளது. இவரை பேட்டிங் செய்யக்கூடிய பந்துவீச்சாளராக பார்க்கலாம். பின்வரிசையில் ரன்களை அடிக்கக் கூடியவர் ஆவார்.
4/5
அமான் கான்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை 2025 மெகா ஏலத்தில் எடுத்திருந்தது. வலது கை பேட்டர், வலது கை வேகப்பந்துவீச்சாளர் ஆவார். புதுச்சேரி அணியின் கேப்டன் ஆவார். நடப்பு சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் 7 இன்னிங்ஸில் 217 ரன்களையும், 5 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். புதுச்சேரி அணியும் தொடரில் இருந்து வருகிறது. இவர் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டருக்கு நல்ல பேக்-அப் ஆப்ஷன் ஆவார்.
5/5
இதர ஆல்-ரவுண்டர்கள்
இவர்கள் மட்டுமின்றி, ஷாருக்கான், ஸ்வப்னீல் சிங், அத்தர்வா அன்கோலேகர், மஹிபால் லோம்ரோர் உள்ளிட்ட இந்திய ஆல்-ரவுண்டர்கள் பலரும் மினி ஏலத்திற்கு வருகிறார்கள். பெரும்பாலான ஐபிஎல் அணிகளுக்கு இந்திய ஆல்-ரவுண்டர்களின் தேவை இருக்கிறது. வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள் மிகச் சொற்பமாகவே இருப்பதால் அவர்கள் நிச்சயமாக ஏலம் போவார்கள்.