October 11 Rasi Palan: இன்று (அக்டோபர் 11, ஞாயிற்றுக்கிழமை) புரட்டாசி 24. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள் இங்கே.
1/13
மேஷம்
மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். போட்டிகளில் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் அனுசரித்து நடந்துகொள்ளவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
அஸ்வினி : தெளிவு பிறக்கும்.
பரணி : திறமைகள் வெளிப்படும்.
கிருத்திகை : மாற்றங்கள் பிறக்கும்.
2/13
ரிஷபம்
முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
கிருத்திகை : சந்திப்புகள் ஏற்படும்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : குழப்பங்கள் விலகும்.
3/13
மிதுனம்
உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பீர்கள். பணி சார்ந்த செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். அவசர முடிவுகளை தவிர்க்கவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை நிறம்
மிருகசீரிஷம் : அனுகூலம் உண்டாகும்.
திருவாதிரை : சிக்கல்கள் குறையும்.
புனர்பூசம் : சேமிப்புகள் மேம்படும்.
4/13
கடகம்
கால்நடை வியாபாரத்தில் லாபம் மேம்படும். புதிய வாகனம் மற்றும் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உருவாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான புரிதல் அதிகரிக்கும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது உத்தமமாகும். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : லாபம் மேம்படும்.
பூசம் : புரிதல் அதிகரிக்கும்.
ஆயில்யம் : அனுகூலமான நாள்.
5/13
சிம்மம்
பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். சர்வதேச வணிகம் தொடர்பான பணிகளில் லாபங்கள் மேம்படும். கூட்டாளிகள் மூலம் பொருள் சேர்க்கைகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
மகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூரம் : லாபங்கள் மேம்படும்.
உத்திரம் : அனுபவங்கள் ஏற்படும்.
6/13
கன்னி
பொருளாதார ரீதியான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் உருவாகும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். பிறமொழி பேசும் நபர்களின் உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்களை அறிந்துகொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : அறிமுகம் உண்டாகும்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : ஆர்வம் உண்டாகும்.
7/13
துலாம்
எந்த செயலிலும் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பழைய நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்க வேண்டாம். அலுவலக ரகசியங்களில் கவனத்துடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : பொறுமையுடன் செயல்படவும்.
சுவாதி : மாற்றமான நாள்.
விசாகம் : ரகசியங்களில் கவனம்.
8/13
விருச்சிகம்
மனம் விரும்பிய செயல்களை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வெளியூர் பயணம் மூலம் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : மனப்பக்குவம் பிறக்கும்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
9/13
தனுசு
உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உடலில் இருந்த சோர்வு புத்துணர்ச்சி அடைவீர்கள். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். புதுவிதமான அணிகளின் மீது ஈர்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை கற்றுக்கொள்வீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
மூலம் : ஆதரவான நாள்.
பூராடம் : புத்துணர்ச்சியான நாள்.
உத்திராடம் : முடிவுகள் பிறக்கும்.
10/13
மகரம்
கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். புதிய துறை சார்ந்த வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : உதவி கிடைக்கும்.
திருவோணம் : ஈடுபாடு உண்டாகும்.
அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
11/13
கும்பம்
எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பழைய கடன் பாக்கிகளை கனிவாக பேசி வசூலிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் வந்து போகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். சொத்து சம்பந்தப்பட்ட செயல்களில் பொறுமையுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்
அவிட்டம் : ஆரோக்கியம் மேம்படும்.
சதயம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.
12/13
மீனம்
குடும்பத்தில் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் வகையில் சிறு வேறுபாடுகள் ஏற்படும். பயனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வீண்செலவுகளால் மனச்சஞ்சலம் ஏற்படும். செய்யும் முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். இணைய வர்த்தகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : வேறுபாடுகள் ஏற்படும்.
உத்திரட்டாதி : மனச்சஞ்சலம் ஏற்படும்.
ரேவதி : கவனத்துடன் செயல்படவும்.
13/13
பொறுப்புத் துறப்பு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.